Sundari Neeyum Sundaran Naanum Serial: வேலுன்னு பேரைக் கேட்டாலே நொங்குறாய்ங்களே!
சென்னை: வெளியில கோபம், மனசுல வேலு...என்ன செய்வாள் தமிழ்ச்செல்வி பாவம். வண்டி தானா வேலு வீட்டுக்கு போவுது. வண்டியைத் திட்டறா.
அந்த சமயம் பார்த்து அவளோட பள்ளி பசங்க ரெண்டு பேரில் ஒருத்தன் வேலு. இன்னொருத்தன்.. டேய் வேலுன்னு கூப்பிட இவள் சட்டுன்னு திரும்பிப் பார்க்கிறாள். விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் காட்சிங்க இது.
என் பேனாவை ஏண்டா எடுத்தே..குடுன்னு கேட்க..இன்னொருத்தன் மாட்டேன்னு சொல்லிட்டு போறான்.

இங்கே வாடா டேய்
உடனே சுர்ருன்னு கோபமான தமிழ்ச்செல்வி, டேய் இங்கே வாடான்னு கூப்பிடறா. அவன் வர..உன் பேர் என்னன்னு கேட்கிறாள்.அவன் வேலுன்னு சொல்ல, வேலுன்னு பேர் வச்சாலே சேட்டை பண்றவங்களாத்தான் இருப்பீங்களான்னு தலையில் ஒரு குட்டு வச்சு..அவன் பேனாவை குடுடான்னு சொல்றா.

வேலு பேனர்
வரும் தலைமுறையினரின் எதிர்காலமே என்று வைத்து இருக்கும் வேலு பேனர் தமிழ்ச்செல்வி கண்ணில் படுது. மீண்டும் அந்த பசங்களைக் கூப்பிட்டு இந்த பேனரை குப்பையில போடுங்கடான்னு சொல்லிட்டு போறா. பசங்க பேனரை எடுத்துட்டு போக, அப்போது தமிழ்ச்செல்வியைப் பார்க்க வருகிறான் வேலு.

எங்கேடா பேனரை
பேனரை எங்கேடா எடுத்துட்டு போறீங்கன்னு இவன் கேட்க, எங்க தமிழ்செல்வி டீச்சர் இதை குப்பையிலே போட சொன்னாங்கன்னு சொல்றாங்க ரெண்டு சிறுவர்களும். குப்பையிலயா? தமிழ்ச் செல்வியா? அதிர்ச்சி ஆகிறான் வேலு.

வேலு நான்தாண்டா
வேலு இப்படியே யோசிச்சுகிட்டு நிற்க, சிறுவர்கள் இருவரில் ஒருவன் வந்து உன் பேரு வேலுவான்னு கேட்கிறான்.ஆமாம்டா தெய்வமே..வரும்கால சமுதாயமே...என் பேரை தெரிஞ்சுக்கிட்டே அது போதும்டா எனக்கு. அரசியலில் புது எதிர்காலம் எனக்கு இருக்குதுன்னு சொல்றான் வேலு.
யோவ்.. உன் பேரை எனக்கு வச்சதுனால தினம் தினம் டீச்சர் தலையில் குட்டு வைக்கறாங்கய்யா... என்று திட்டிவிட்டு போகிறான் சிறுவன்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications