sundari neeyum sundran naanum serial: ப்ப்பா...! இதுக்கு கூட இப்படி சொல்லலாமா?
சென்னை: நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் மக்கள் செல்வர் விஜய் சேதுபதி நடிச்சு இருப்பார். அவர் தனது கல்யாண வரவேற்பின் போது தனது பக்கத்தில் நிற்கும் மணப்பெண்ணின் மேக்கப்பைப் பார்த்து ப்ப்பா என்று அருவெறுப்பில் அசந்து போவார்.
ஆனால், இங்கே விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் தமிழ்ச் செல்வியின் காதல் பார்வையில் கிறுகிறுத்துப் போன வேலு ப்ப்பா என்று சொல்கிறான்.
காதல் பார்வை.. சைகைகள் பல மொழிகளில் சொல்ல முடியாத விஷயங்களை எல்லாம் மிக அருமையாக சொல்லிவிடும். அப்படித்தான் இந்த சீரியலில் தமிழ்ச் செல்வியின் காதல் பாஷை இருக்கிறது.

வேலு தமிழ்ச்செல்வி
தமிழ்ச்செல்வியும் வேலுவும் எப்போதும் எலியும் பூனையும் போல இருந்தாலும்... ஒருவருக்கு ஒருவர் மீது உள்ளுக்குள் காதல் பொங்கி வழிகிறது.அவ வீட்டுக்கு வரலேன்னா இவன் துடித்து போகிறான். இவள் வண்டி என்னடான்னா ஸ்டார்ட் பண்ணிய உடனே வேலு வீட்டு வாசலில் போயி நிக்குது.

இல்லை காதல்
ஆனால், இருவருமே தங்களுக்குள் காதலில் என்பது போலவே பொய்யாக நடிச்சுக்கிட்டு இருக்காங்க. அவள் காயத்துக்கு மருந்து போட இவன் மயில் இறகுடன் நடு ராத்திரி வீட்டுக்கு வர்றான்.அதோடு கை நிறைய மயிலிறகை கொடுத்துட்டு போறான். இவள் மயிலிறகை பத்திரமாக தன்னுடன் படுக்கையில் வச்சுக்கிட்டு போர்த்திக்கிட்டு தூங்கறா.

இருவரும் படுக்கையில்
படுக்கையில் எழுப்புகிறேன் பேர்வழி என்று வேலு ரூமுக்குப்போக, அவனுடன் படுக்கையில் உருண்டாச்சு. அவள் விழப் போக இவன் தாங்கிப் பிடிக்க ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்க என்று நெருங்கியுமாயாச்சு. இன்னும் இவர்களுக்குள் காதல் இல்லையாம்.

போதுமே பார்வை
ஆனால்,காதலுக்கு பார்வை ஒன்றே போதுமே... அவள் தமிழ்ச்செல்வி வீட்டுக்கு வேலு வந்திருக்க.. குடும்பமே அவனைச் சுற்றி உட்கார்ந்து அவன் சொல்லும் ஜோக்குகளை ரசிச்சு சிரிச்சுக்கிட்டு இருக்காங்க. அதை புத்தகத்தை படிச்சுக்கிட்டு ஓரமாக நின்று கொண்டு இருக்கும் தமிழ்ச்செல்வி புத்தகத்தில் இருந்து தனது பார்வையை மட்டும் மேல் எழுப்பி வேலுவைப் பார்க்க, வேலு அதன் காதல் வீரியம் தாங்க முடியாமல் ப்ப்பா என்கிறான்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications