சுந்தரி சீரியல் கதாநாயகனுக்கு சன் டிவி டாப் சீரியல் கதாநாயகியோடு திருமணம்.. முதல் போஸ்டே இப்படியா?
சென்னை: சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகர் அரவிஷ் நேற்று சீரியல் நடிகை ஹரிகாவை திருமணம் செய்து இருக்கிறார்.
நடிகை ஹரிகா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் திருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர்தான்.

ஹரிகா மற்றும் அரவிஷ் திருமணம் பெரியோர்களின ஆசிர்வாதத்தோடு இரு வீட்டு சம்மதத்தோடு நடைபெற்று இருந்த நிலையில் இவர்களுக்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சின்னதிரையில் ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. இது பல வருடங்களாகவே பின்பற்றப்பட்டு வருகிறது தான். அதிலும் சமீப காலமாக ஒரே சீரியலில் நடிக்காத நடிகர்கள் கூட காதலித்து திருமணம் செய்து இருக்கின்றனர்.

அந்த வகையில் தான் சில வருடங்களுக்கு முன்பு ஷபானா மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் செழியனாக நடித்து வந்து இப்போது ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் ஆர்யன் திருமணமும் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் காதலிக்கிறார்கள் என்ற செய்தி இணையத்தில் வெளியானதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. காரணம் இருவரும் வெவ்வேறு சேனலில் வெவ்வேறு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுக்குள் காதல் என்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது இவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதே வரிசையில் மற்றொரு சின்னத்திரை பிரபலங்களும் சேர்ந்து இருக்கின்றனர். அதாவது சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கேரக்டரில் நடித்து பிரபலமான அரவிஷ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த திருமகள் சீரியலில் கதாநாயகி ஹரிகாவை காதலித்து நேற்று திருமணமும் செய்து இருக்கிறார்.
சுந்தரி சீரியலில் சுந்தரியின் அண்ணனாக இருந்து பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் அரவிஷ். சுந்தரி சீரியலின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறார். கோயம்புத்தூரை சேர்ந்த அரவிஷ் இப்போது இலக்கியா சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு அரவிஷ் மற்றும் ஹரிகா காதல் விவாகாரம் இணையத்தில் ரசிகர்களுக்கு தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்தின்படி இவர்கள் இருவருக்கும் எங்கேஜ்மென்ட் முடிவடைந்து இருந்த நிலையில் நேற்று திருமணம் முடிவடைந்து இருக்கிறது. இவர்களுடைய திருமணத்திற்கு அதிகமான சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். திருமணம் முடிந்ததும் அரவிஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களுக்கு 'என் பொண்டாட்டியை பாக்கணுமா..?' என்று கேள்வி கேட்டபடி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அரவிஷ் மற்றும் ஹரிகா இருவரும் மணகோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இடம் பெற்று இருக்கிறது. தற்போது இவர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications