அவசர அவசரமாக முடிவுக்கு வரும் சுந்தரி சீரியல்..? காரணம் இதுதானா..? ஆனாலும் இப்படி ஒரு டுவிஸ்டா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் விரைவில் முடிவடைய இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சுந்தரி சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த சீரியல் எதனால் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீரியலின் கடைசி கதை என்ன மாதிரி இருக்கப் போகிறது என்ற தகவல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் டிஆர்பியில் முன்னணியில் இருக்கும் சீரியல்களில் ஒன்றாக சுந்தரி சீரியல் இருக்கிறது. கிட்டத்தட்ட நான்கு அல்லது மூன்று இடங்களுக்குள் வந்து கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் திடீரென்று முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சீரியல் இரண்டு வருடங்களாக மேலாக ஒளிபரப்பாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் சீரியலின் முடிவு குறித்து சீரியலின் தீவிரமான ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.
அதே நேரத்தில் சுந்தரி சீரியல் கதை ஆரம்பிக்கும் போது அதிகமான வரவேற்பு இருந்த நிலையில், இப்போது சீரியல் சுவாரசியம் குறைந்துவிட்டது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். காரணம் அணு பல வருடங்களாகவே கர்ப்பமாக இருப்பது போன்று சீன் போய்க் கொண்டே இருக்கிறது.
அதே நேரத்தில் ஊரில் தான் ஒரு ஐஏஎஸ் ஆபிஸராக வேண்டும் என்று வைராக்கியத்தோடு இருந்த சுந்தரி கார்த்தியை கல்யாணம் செய்த பிறகு அவருடைய கேரக்டர் மற்றும் அவர்தான் அணுவின் கணவர் என்று தெரிந்தும் அதை குடும்பத்தினரிடமிருந்து மறைத்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் இந்த சீரியலில் டுவிஸ்ட் என்கிற பெயரில் அடுத்தடுத்து ஒவ்வொருவராக ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியும், இறந்து போவதுபோன்றும் சீன்களும் வந்து கொண்டே இருந்தது.

கார்த்திக் மற்றும் அணு உடைய திருமணம் நடந்து முடிந்து விட்டது என்று சுந்தரி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. ஆனால் ஒவ்வொருவருக்கும் தெரிவதற்கு முன்பும் ரசிகர்களை பாடாய்ப்படுத்தி எடுத்து விட்டார்கள்.இந்த நிலையில் தொடர்ச்சியாக சுந்தரி சீரியலுக்கு சமீபத்தில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டே இருந்தது.
சுந்தரி கருப்பான பெண்ணாக இருந்து இந்த சமூகத்தில் சந்திக்கும் அவலங்களை பற்றி இந்த சீரியலில் காட்டி, பிறகு அவர் சாதித்து வெற்றி பெற்றது போன்று கதை இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக சுந்தரி படும் அவமானங்கள் மற்றும் எதற்கெடுத்தாலும் கோவிலில் பரிகாரம் என்ற முறையை அதிகமான ரசிகர்கள் ஏற்கவில்லை.
இந்த நிலையில் இந்த சீரியல் திடீரென்று இப்போது முடிவுக்கு வர இருக்கிறது. அதைத் தொடர்ந்து கதை வேகமாக பயணிக்க தொடங்கி இருக்கிறது. இப்போது ஒரு வழியாக சுந்தரி இன்டர்வியூக்கு போயிருக்கிறார். அதே நேரத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் கார்த்தி பற்றிய மொத்த விஷயங்களும் அணுவிற்கு தெரிய இருக்கிறது. இந்த நிலையில் அணுவின் பிரசவத்தோடு அணு இறந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு அணுவின் குழந்தையை சுந்தரி வளர்த்து ஆளாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இனி கதை எப்படி மாறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications