சன் டிவி சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம்.. யாருக்கு அதிகம்? இதை எதிர்பார்த்து இருக்கமாட்டீங்க
சென்னை: டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடிக்கும் சன் டிவி சீரியலில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விபரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
அந்த அடிப்படையில் எந்தெந்த நடிகைகள் எவ்வளவு ரூபாய் ஒரு நாளைக்கு சம்பளமாக வாங்குகிறார்கள் என்ற தகவல்களை பார்க்கலாம்.
அதில் எந்த நடிகை அதிகமான சம்பளம் வாங்குகிறார் என்றும் எந்த நடிகைக்கு குறைவான சம்பளம் கிடைக்கிறது என்றும் பார்க்கலாம்.

பொதுவாக சன் டிவி தான் டிஆர்பியில் தொடர்ச்சியாக முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கும். சன் டிவிக்கு போட்டியாக பல சேனல்கள் புதிது புதிதாக சீரியல்களை அறிமுகப்படுத்திக் கொண்டாலும் ரசிகர்களின் மத்தியில் என்றுமே சன் டிவிக்கென்று தனி வரவேற்பு இருக்கிறது. அதனாலையே சன் டிவி சீரியலில் நடிப்பதற்காகவும் பல நடிகைகள் காத்திருக்கின்றனர்.
அந்த வரிசையில் சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இந்த சீரியலை தொடர்ந்து சுந்தரி, கயல், இனியா போன்ற சீரியல்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறது. எதிர்நீச்சல் சிரியலை விட கயல் சீரியல் அதிகமான முறை முதலிடத்தை பிடித்து விடுகிறது. அதற்கு காரணம் எதிர்நீச்சல் சீரியல் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகுவது பலரால் பார்க்க முடியவில்லை என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சன் டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விபரங்கள் குறித்து பார்க்கலாம். அதில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மதுமிதா அதாவது ஜனனியாக நடிக்கும் மதுமிதா ஒரு நாளைக்கு 15,000 சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். இவர் கன்னடத்தில் பல சீரியல்களில் நடித்து தற்போது முதல்முறையாக தமிழுக்கு வந்திருக்கும் நிலையில் இவருக்கு அதிகமான ரசிகர்களும் உருவாகி இருக்கின்றனர்.
அதுபோல சுந்தரி சீரியலில் நடிக்கும் கேப்ரெல்லா செல்லஸ் ஆரம்பத்தில் ஒரு மாடலாகவும் டிக் டாக் பிரபலமாகவும் ஸ்கிரிப்ட் எழுத்தாளராகவும் தன்னுடைய பயணத்தை தொடங்கி இப்போது சன் டிவியில் சுந்தரி சீரியல் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகி கொண்டிருக்கிறார். இவர் ஒரு எபிசோடு நடிப்பதற்காக மட்டும் 40 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக இனியா சீரியலில் நடிக்கும் ஆலியா மானசா. இவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் செம்பா கேரக்டரில் அறிமுகம் ஆகி அதைத் தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலிலும் சந்தியாவாக நடித்திருந்தார். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகிய ஆலியா இப்போது சன் டிவி சீரியலில் நடித்து வருகிறார். இவர் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம்.

அதைத்தொடர்ந்து சைத்ரா ரெட்டி அதாவது கயல் சீரியலில் நடிக்கும் நடிகை சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். கயல் சீரியலில் மூலமாக வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் பல இளைஞர்களையும் தனக்கு ரசிகர்களாக மாற்றி இருக்கும் கயலுக்கு இப்போது அதிகமான வரவேற்பு கூடிக் கொண்டிருக்கிறது

அதுபோல நடிகை ஸ்ருதி ராஜ் இவர் கனா காணும் காலங்கள் சீரியலில் மூலமாக பலருக்கும் தெரிந்தவர் தான் அதைத் தொடர்ந்து ஆபீஸ் போன்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனாலும் பல வருடங்கள் கழித்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தாலாட்டு சீரியலில் நடித்திருந்தார். சில வாரங்களுக்கு முன்புதான் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் அவர் ஒரு எபிசோடுக்கு 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதுபோல இன்னும் சில நடிகைகள் பற்றிய விவரங்களை அடுத்ததாக பார்க்கலாம்.
-
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications