மணிவண்ணனின் மெமரி பவர்.. ஈகோ இல்லாத அறிவாளி.. அன்னைக்கு மனோபாலா மட்டும் இல்லேன்னா: நெகிழ்ந்த பிரபலம்
சென்னை: சென்டிமென்ட் நிறைந்த சினிமா உலகில் தனித்துவம் வாய்ந்தவர் மணிவண்ணன்.. அதேசமயம், நம்பிக்கை உள்ளவர்களை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாதவர்" என்று திரை திறனாய்வாளர் சுபைர் பேட்டி ஒன்றில் மணிவண்ணன் பற்றி கூறியிருக்கிறார்.
திரை திறனாய்வாளர் சுபைல் ஜமால், GCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளர்.. அந்த பேட்டியில்,"மணிவண்ணன் ஷூட்டிங்குக்கு கிளம்புறதே சுவாரஸ்யமாக இருக்கும்.. 20 நாள் பொள்ளாச்சியில் ஷூட்டிங் என்றால், அதற்கு முன்கூட்டியே லிஸ்ட் மட்டும் போட்டுட்டு கிளம்புவாரு. ஆனால், ஸ்கிரிப்ட் எதுவுமே இருக்காது.. வெறும் சீன் மட்டுமே ஒரு வெள்ளை பேப்பரில் எழுதி கொண்டு போவாராம்.

ஷூட்டிங்கில்கூட, அன்றையதினம் என்ன சீன்? எடுக்க போகிறார் என்று யாருக்குமே தெரியாதாம். கேமரா ஃபிரேம் முதல் டான்ஸ், ஃபைட் என எல்லாமே மணிவண்ணனுக்கு தெரியும்.. வெறும் வெள்ளை பேப்பரை ஷூட்டிங்கிற்கு கொண்டு போவோம், ஆனால் திரும்பி வரும்போது, அந்த பேப்பரில் ஸ்கிரிப்ட் முழுமையாக எழுதப்பட்டிருக்கும் என்று மணிவண்ணணின் அசிஸ்டன்ட்கள் சொல்வார்களாம்.
வசனம்: டயலாக் முதற்கொண்டு எல்லாவற்றையும் தன்னுடைய மூளையிலேயே வைத்திருப்பார். அந்தளவுக்கு நினைவுத்திறன் கொண்டவர். மணிவண்ணனின் முதல்படம் புதிய வார்ப்புகள். அந்த படத்தில் ஒருமுறை "எடிட்டிங் ரிப்போர்ட்" என்று சொல்லக்கூடிய 20 நாள் எடுக்கப்பட்டிருந்த சீன்களை எல்லாம், மொத்தமாக பேப்பரில் எழுதி கையில் வைத்திருந்தார்.
ஆனால், ஷூட்டிங்குக்காக அங்கிருந்த ஆற்றில் நின்றுகொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக அத்தனை பேப்பரும் ஆற்றில் விழுந்து அடித்துக் கொண்டுபோய்விட்டன. இதனால் பதறிப்போன அங்கிருந்த டெக்னீஷியன்கள், முதல் படத்திலேயே இவ்வளவு அஜாக்ரதையா? பாரதிராஜா சார் உன்மீது கோபப்பட போகிறார்" என்றெல்லாம் பயமுறுத்தி உள்ளனர்.
மனோபாலா: ஆனால், மனோபாலா மட்டும் மணிவண்ணனிடம் சென்று, 20 நாளும் எடுக்கப்பட்ட சீன்களை நினைவுபடுத்தி எழுதி கொண்டுவருமாறு சொன்னார். அதன்படியே அன்றைய தினம் இரவு உட்கார்ந்து, ஒவ்வொரு சீனையும் அச்சுஅசல் பிசகாமல் எழுதி முடித்தார். இதுவே மணிவண்ணனின நினைவு திறனுக்கு எடுத்துக்காட்டாகும்.
மிகச்சிறத்ந படிப்பாளி மணிவண்ணன்.. ஹாலிவுட் படங்களை அதிகம் பார்ப்பார்.. எப்போதுமே மார்க்ஸ் எழுதிய புத்தகம், ஆங்கில நாவல்கள் கையில் இருக்கும். மிகச்சிறந்த எழுத்தாளர், கதை ஆசிரியராக இருந்தபோதிலும், மற்ற கதாசிரியர்களிடமிருந்து கதை வாங்குவதில் ஈகோ பார்க்க மாட்டார். தான் என்ற கர்வம் இல்லாதவர்.. மற்றவர்களிடம் கதையை வாங்குவதற்கு பெருந்தன்மை வேண்டும். அதனால்தான் மணிவண்ணன் இன்றும் பேசப்படுகிறார்.
சாதி மதம்: சாதி, மதத்துக்கு எதிரான படங்களை எதிர்த்து சாட்டையால் அடித்திருக்கிறார். காமெடி காட்சிகளிலேயே மூடநம்பிக்கைகளை சாடியவர்.. தன்னுடைய படங்களில் போகிறபோக்கிலேயே மூட நம்பிக்கைகளை நொறுக்கி பேசுபவர்.. அரசியல் நையாண்டிகளை புகுத்தியவர்.
சீமான், சுந்தர்.சி, செல்வபாரதி இவர்கள் எல்லாருமே அவரது உதவியாளர்கள்தான்.. எப்போதுமே ஹீரோவை மட்டுமே நம்பி மணிவண்ணன் படங்களை எடுக்க மாட்டார்.. உதாரணத்துக்கு ரஜினியை வைத்து படம் எடுத்தால், ஓபனிங் சீன், பாட்டு, சண்டை, பஞ்ச் வசனம் வைக்க வேண்டிவரும். இதெல்லாம் அவருக்கு பிடிக்காது.
அமைதிப்படை: தன்னுடைய கதைக்கு எந்த நடிகர் தேவையோ, அந்த நடிகரை வைத்துதான் படம் எடுப்பார். அது தன்னுடைய படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தீவிரமாக மார்க்சிஸ்ட் ஈடுபாடு கொண்டவர் மணிவண்ணன்.. மிகப்பெரிய அரசியல் ஞானி.. அரசியல் புரிதலுள்ள நபர்.. சமகால நிகழ்வுகளை வைத்து அவர் படம் எடுத்தால், அமைதிப்படையை விட அதிகமாக ஓடியிருக்கும்.
ஒருமுறை மணிவண்ணனுக்கு சர்ஜரி ஒன்று செய்ய வேண்டியிருந்தது. அவருடன் இருந்தவர்கள், கோயிலுக்கு சென்று ஒருமுறை வேண்டிக் கொள்ள சொன்னார்கள். ஆனால், கடைசிவரை கோயிலுக்கு போகவில்லை. சென்டிமென்ட் நிறைந்த சினிமா உலகில் தனித்துவம் வாய்ந்தவர் மணிவண்ணன்.. அதேசமயம், நம்பிக்கை உள்ளவர்களை எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யாதவர்.
உடல்நிலை: ஆனால் 59 வயதிலேயே இறந்துவிட்டார்.. தன்னுடைய உடம்பை சரியாக கவனித்து கொள்ளவில்லை. இல்லாவிட்டால் இன்னும் 20 வருஷங்கள் இருந்திருப்பார்" என்றெல்லாம் சுபைர் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications