சூப்பர் சிங்கரில் புது Vjக்கு முதல் நாளே குவியும் பாராட்டு.. பிரியங்கா நிலைமை? ஆனால், அடுத்த வாரம் சம்பவம் இருக்கு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் தொகுப்பாளினியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் லட்சுமி பிரியா கலந்து கொள்கிறார். அவருக்கு ரசிகர்கள் அதிகமாக பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். அதே நேரத்தில் இனி பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருவாரா இல்லையா என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை சில தொகுப்பாளர்களே பல வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்கள். அது வரிசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விஜே பிரியங்கா தான் இப்போது தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார். ஆனால் இந்த வாரத்தில் பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக விஜய் டிவியில் "வீகா(VK)" என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் லட்சுமி பிரியா கலந்து கொண்டிருக்கிறார்.

கமெண்ட்ஸ்
லக்ஷ்மி பிரியா கலந்து கொண்ட ப்ரோமோ வெளியானதில் இருந்து இனி பிரியங்கா இந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டாரா? என்ற கேள்விகள் அதிகமாக இருக்கிறது. பிரியங்காவின் ரசிகர்கள் பிரியங்காவை மிஸ் பண்ணுவதாக தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் லட்சுமி பிரியாவின் ரசிகர்கள் இனி லட்சுமி பிரியாவே இந்த நிகழ்ச்சியில் தொடர வேண்டும் என்றும் கமெண்ட்டுகள் கொடுத்து வந்தனர்.
ரசிகர்கள் கருத்து
இந்த நிலையில் இன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் லட்சுமி பிரியா தொகுபாளினியாக இருக்கிறார். இந்த எபிசோடு ஜியோ டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் லட்சுமி பிரியா இந்த நிகழ்ச்சியில் தெளிவாக பேசுகிறார், அவரே இந்த நிகழ்ச்சியில் தொடர வேண்டும் என்று அதிகமான கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
சூப்பர் சிங்கர் ப்ரோமோ
இன்று விஜய் டிவியின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போடப்பட்டிருக்கிறது, அதில் மாகாபா மற்றும் லட்சுமி பிரியா இருவரும் இருக்கிறார்கள். அப்போது லட்சுமி பிரியாவை பற்றி கேப்ஷன் கொடுத்திருக்கிறது, "என்ன லக்ஷ்மி பிரியா இந்த பக்கம்" என்று விஜய் டிவி அட்மின் கலாய்த்து இருக்கிறார். அதற்கு கீழே அதிகமான ரசிகர்கள் லட்சுமி பிரியா தான் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்குகிறார் இவரே தொடர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கறார்கள்.
லட்சுமி பிரியா விளக்கம்
ஏற்கனவே இந்த வார சூப்பர் சிங்கர் ப்ரோமோ வெளியாகும் போது அதில் ஒரு ப்ரோமோவில் மாகாபா லட்சுமி பிரியாவிடம் என்ன இந்த பக்கம் என்று கேட்கும் போது அதற்கு லட்சுமி பிரியா, "அந்த பிகே (பிரியங்கா) அனுப்பி வைத்த விகே தான் நான் என்று சொல்லி இருந்தார்" இதனால் பிரியங்காவிற்கு பதிலாக லட்சுமி பிரியா இந்த ஒரு வாரம் மட்டும்தான் வருவார் என்று கூறப்படுகிறது.
புது தொகுப்பாளினி
ஏற்கனவே பிரியங்காவிற்கு கடந்த வாரத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இதனால் பிரியங்கா சூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை இருந்ததால்தான் பிரியங்காவிற்கு பதில் லக்ஷ்மி பிரியா கலந்து கொண்டிருப்பார் என்றும் கூறப்படுகிறது. பிரியங்கா விஜய் டிவியை விட்டு விலகப் போகிறார், அவருக்கு திருமணம் முடிந்தது கூட அவரை விஜய் டிவியில் இருந்து விலக்கி விட்டார்கள் அதனால் தான் அவர் அவசர திருமணம் செய்து கொண்டார் என்ற வதந்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை.
பிரியங்கா விலகல் இல்லை
விஜய் டிவியில் பல வருடங்களாக பிரியங்கா தொகுத்து வழங்கி வரும் நிலையில் அவரே இந்த நிகழ்ச்சியில் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து விஜய் டிவி தரப்பில் சிலரிடம் விசாரிக்கும் போது விஜய் டிவியின் உரிமை இப்போது கைமாறி இருப்பது உண்மைதான். ஆனால் விஜய் டிவி தொகுப்பாளர்கள் யாரையும் வெளியே போக சொல்லவில்லை. இந்த சேனலுக்கு என்று அடையாளமாக சில தொகுப்பாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் இருப்பதற்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications