என்ன சாதி? கோயிலில் அருணா சந்தித்த அவமானம்.. சூப்பர் சிங்கர் வெற்றியாளர் வாழ்வில் இத்தனை சோகங்களா?
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் 9 வது சீசனின் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற அருணா, கோயில்களிலில் பாடும்போது அவரது சாதியை கேட்டு பலர் அவமதித்து இருக்கிறார்கள். என்ன நடந்தது?
விஜய் டிவியில் கடந்த 6 மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 9 இன் இறுதிப்போட்டி நேற்று நடந்து முடிந்தது. இதில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 2 சுற்றாக நடைபெற்ற இப்போட்டியில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட அருணா முதல் பரிசை தட்டிச் சென்றார்.

2 வது பரிசை பிரியா ஜெர்சனும், 3 வது பரிசை பிரசன்னாவும் வென்றனர். இறுதிச்சுற்றுக்கு முதலில் முன்னேறிய அபிஜித்தும், 2 வதாக முன்னேறிய பூஜாவும் முதல் 3 இடங்களுக்குள் வரவில்லை. இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சூப்பர் சிங்கர் சீசனை வென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்று உள்ளார் அருணா.
வெற்றிபெற்ற அருணாவுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கத் தொகையில் வழங்கப்பட்டது. 2 வது பரிசை வென்ற பிரியா ஜெர்சனுக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், 3 வது பரிசை வென்ற பிரசன்னாவுக்கு 6 லட்சம் ரூபாய் மதிப்புடைய பரிசும் வழங்கப்பட்டது.
சூப்பர் சிங்கரை வென்ற முதல் பெண் என்ற சாதனையை படைத்த அருணா, கடந்த வந்த பாதைகள் கரடு முரடானவை. குறிப்பாக ஜாதி என்ற முள் அவரது நெஞ்சை தைத்தது போட்டது. இசை மேதை பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் பூமியான சீர்காழியில் இருந்து மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் அருணா. இவரும் அவரது சகோதரி அகிலாவும் இரட்டையர்கள்.
இசை மீது ஆர்வம் கொண்ட இருவரின் கனவுகளுக்கும் உயிர் கொடுத்தவர் அவரது பாட்டிதான். இருவரையும் கோயில்களில் நடக்கும் பாட்டு வகுப்புகளில் சேர்த்துவிட்டு தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வந்தது அவர்தான். இப்படி கோயில்களில் திருமுறை பாடி இசைத் திறனை வளர்த்துக்கொண்ட அருணாவும் அகிலாவும் சினிமா பாடல்களை கேட்காமலேயே வளர்ந்து இருக்கிறார்கள்.
ஆனால், ஒரு வட்டத்துக்குள் சுருங்கிவிடக்கூடாது என்பதற்காக இசைத் திறனை மேலும் வளர்த்துக் கொள்ள திரைப்பட பாடல்களை கேட்டு பாடி பழகி சூப்பர் சிங்கருக்குள் நுழைய ஆடிசனில் பங்கேற்றனர். இதில் அருணா டாப் 20 போட்டியாளர்களில் ஒருவராக தேர்வானார். அவரது அசாத்திய பாடல் திறன், குரல் வளத்தை நடுவர்கள் தொடங்கி பலரும் வியந்து பாராட்டினர்.
குறிப்பாக சிறப்பு விருந்தினராக வந்த இசையமைப்பாளர் தேவா, இசையமைப்பாளர் கங்கை அமரன், இசையமைப்பாளர் வித்யாசாகர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இசையமைப்பாளர் சாம் சி எஸ் என பலரும் அவரது குரலை பாராட்டினார்.

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதி, அருணாவை பாராட்டியது மட்டுமின்றி தனது இசையில் ஒரு திரைப்படத்தில் பாடுவதற்கும் வாய்ப்பளித்தார். பாடல் வரிகளை எழுதுவதிலும் திறன் கொண்ட அருணா, சில நொடிகளில் பாடலை எழுதி அதற்கு 10 நிமிடங்களில் இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்து கொடுத்தார்.
இப்படி பல்வேறு திறன்களை தன்னகத்தே கொண்ட அருணாவை சாதி என்ற கொடூர முள் தைத்து உள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் பாடி முடித்த பிறகு பேசிய அருணா, "எங்கள் குடும்பம் பானை தயாரிக்கும் தொழில் செய்து வந்தது. நாங்கள் கோயிலில் எல்லாம் பாட செல்வோம். என்னதான் நாம் பாடினால் பாடி முடிந்த பிறகு எல்லோரும் கேட்கும் முதல் கேள்வி நீங்கள் என்ன சாதி என்பதுதான்." என்று வேதனையோடு சொல்லி இருப்பார்.
இதனை கேட்ட நடுவர்கள், இசைக்கு சாதி, மதம் கிடையாது. என்று அவருக்கு ஆறுதல் கூறினார்கள். அடுத்தடுத்த எபிசோடுகளில் தன்னிடம் சாதி என்ன என்று கேட்டவர்கள் முன்னிலையில் மேன்மேலும் சாதித்துக்கொண்டே சென்ற அருணா, இன்று 17 ஆண்டுகால சூப்பர் சிங்கரின் முதல் பெண் வெற்றியாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்து உள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications