சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது இனிமையான குரலாலும், தனித்துவமான பாடும் முறையாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அருணா ரவிச்சந்திரன். இப்போது திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரிசப்ஷன் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது அதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர்.

சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் பட்டம் வென்றதன் மூலம், அந்த நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல்முறையாக பட்டம் வென்ற பெண் பாடகி என்ற ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியவர் அருணா. பல ஆண்டுகளாக ஆண் போட்டியாளர்கள் மட்டுமே வெற்றி பெற்று வந்த நிலையில், ஒரு பெண் போட்டியாளராக பட்டத்தை கைப்பற்றிய அவர், திறமைக்கும் விடாமுயற்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறார்.
இசை மீது ஆர்வம்
சிறு வயதிலேயே இசை மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்ட அவர், மூன்று வயதிலிருந்தே பாடல் பயிற்சி தொடங்கியதாக கூறியிருக்கிறார். குடும்பத்தின் உறுதுணையும், தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சிகளும், மேடைகளில் தன்னம்பிக்கையுடன் நிற்கும் திறனையும் அவருக்கு அளித்தன. பல சின்ன மேடைகளில் பாடிய அனுபவம், பின்னர் பெரிய மேடைகளில் தன்னைக் காட்டிக் கொள்ள உதவியது. பக்தி பாடல்கள் இவர் பாடுவது பலருக்கும் பிடிக்கும்.
சூப்பர் சிங்கர் மேடையில் அவர் வெளிப்படுத்திய திறமைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. குரல் கட்டுப்பாடு, ராக உணர்வு, பாடலின் உணர்ச்சியை வெளிப்படுத்தும் திறன் போன்றவை நடுவர்களையும், பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. குறிப்பாக இறுதிப்போட்டியில் அவர் பாடிய பாடல், அவரை வெற்றியாளராக மட்டுமல்லாமல், மக்கள் மனதில் நிலைத்திடும் குரலாக மாற்றியது. இந்த வெற்றிக்காக அவருக்கு பணப் பரிசும், வீடும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் சிங்கர் அருணா எங்கேஜ்மென்ட்
இந்த வெற்றிக்கு பிறகு, அவரது இசைப் பயணம் மேலும் விரிந்தது. தனது சகோதரியுடன் இணைந்து பக்திப் பாடல்களை பாடி, இணைய தளங்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறார். இந்த கூட்டணி இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், திரைப்படங்களிலும் பின்னணி பாடகியாக வாய்ப்புகளை பெற்று, சினிமா இசை உலகிலும் தனது தடத்தை பதித்து வருகிறார்.
இவ்வாறு தொழிலில் முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மஸ்வந்த் என்பவருடன் அவரது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்த இந்த நிகழ்வு குறித்து அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 12ஆம் தேதி அருணா ரவீந்திரனும் மஸ்வந்தும் திருமண பந்தத்தில் இணைந்தனர். இந்த திருமணம் குடும்பத்தினரும் நெருங்கியவர்களும் கலந்து கொண்ட நிகழ்வாக நடைபெற்றது. திருமணத்தை முன்னிட்டு, "ஈருடல் ஓர் உயிர்... ஒன்றாகும் நாள் நெருங்குகிறது" என்ற உணர்ச்சிப்பூர்வமான பதிவையும் அவர்கள் பகிர்ந்திருந்தனர்.
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணம்
திருமணத்தை தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் இசை உலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். குறிப்பாக சிவாங்கி, கேபிஒய் பாலா, கேபிஒய் புகழ், பாடகர் மனோ, பாடகி கே எஸ் சித்ரா, சூப்பர் சிங்கர் பூஜா, டிஜே பிளாக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டது நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பை சேர்த்தது. மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமான பலரும், பாடகர்கள் மற்றும் பாடகிகளும் கலந்து கொண்டு மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அருணாவின் ரிசப்ஷன்
இந்த வரவேற்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ரசிகர்கள் மட்டுமல்லாமல், பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். அருணாவின் எளிமையான தோற்றமும், மகிழ்ச்சியான முகப்பும் இந்த புகைப்படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications