10th ரிசல்ட்.. பாட்டோடு படிப்பில் சாதித்த சூப்பர் சிங்கர் ஹர்ஷினி.. மார்க் இவ்வளவா? அரசு பள்ளி மாஸ்
சென்னை: இன்று 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியிருக்கிறது. இதில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிகமான எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த முறை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த ஹர்ஷினி நேத்ரா தேர்ச்சி பெற்றிருக்கும் நிலையில் அவர் பெற்ற மதிப்பெண்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
சமீபத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கிறது. இதில் பல மாணவர்கள் தாங்கள் நினைத்த மதிப்பெண் வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஒரு சில மாணவர்கள் தாங்கள் எதிர்பார்க்கிற மதிப்பெண் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்தில் இருந்தாலும் அடுத்து பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் இதைவிட படிப்பில் கவனம் செலுத்தினால் அதிகமான மதிப்பெண்கள் பெறலாம்.

இப்படியான நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹர்ஷினி நேத்ரா இந்த முறை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்கிறார். அவர் தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் 384 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறாராம். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய ஹர்ஷினி நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்ததால் அதிகமாக படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.
ஆனாலும் படிப்பிலும் சரி பாடலிலும் சரி ஒரே போல கவனம் செலுத்தியதால்தான் என்னால் இந்த மதிப்பெண்கள் பெற முடிந்தது. 384 மதிப்பெண் என்பது குறைவானது கிடையாது என்று எனக்கு தோன்றுகிறது. பாடலில் நான் எல்லாருடைய குரலையும் எடுத்துப் பாடுவது குறித்து எல்லோரும் என்னை பாராட்டுகிறார்கள். அது எனக்கு கிடைத்த வரம் என்று தான் நான் சொல்வேன்.

அதே நேரத்தில் நான் சென்னையில் இப்போது கவர்மெண்ட் ஸ்கூலில் தான் படித்துக் கொண்டிருக்கிறேன். பதினொன்றாம் வகுப்பில் எக்கனாமிக்ஸ் எடுக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். பத்தாம் வகுப்பில் மதிப்பெண் கொஞ்சம் குறைந்திருக்கிறது. 450 மதிப்பெண்களுக்கு மேலே பெறுவேன் என்று வீட்டில் எல்லாரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் அந்த நேரத்தில் நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்ததால் என்னால் சரியாக மதிப்பெண் எடுக்க முடியாமல் போய்விட்டது என்று வருத்தத்தோடு ஹர்ஷினி பேசியிருக்கும் நிலையில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி இப்போது மதிப்பெண் குறைந்து விட்டாலும் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடுங்கள் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications