கலெக்டரை வியக்க வைத்த சூப்பர் சிங்கர் நஸ்ரின் பாடல்.. “எளிய தாய்”க்கு இதை விட வேற என்ன வேணும்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியில் ரன்னராக தேர்வான "நஸ்ரின்" மாவட்ட ஆட்சியர் முன்பு பாடி அவரை விளக்க வைத்திருக்கிறார். அரசு பள்ளி மாணவியான நஸ்ரின் தனியார் தொலைக்காட்சியில் பாடி வெற்றி பெற்றதற்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலமாக பலருடைய திறமைகள் வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டப்படுகிறது. அடிப்படை வசதிகள் இல்லாமல் பல குடும்பங்களில் வாழும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எத்தனையோ திறமைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் அதை வெளிக்காட்டுவதற்கு சரியான மேடை அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கிறது. ஒரு சிலர் பல போராட்டங்களையும், தோல்விகளையும் சந்தித்தாலும் ஏதோ ஒரு இடத்தில் தங்களுடைய திறமையால் வெற்றி பெற்று உலகை வியக்க வைத்திருக்கிறார்கள். அதேபோல ஒருவர்தான் சூப்பர் சிங்கர் நஸ்ரின்.

சூப்பர் சிங்கர் நஸ்ரின்
இந்த குட்டி குழந்தை விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அரசு பள்ளியை சார்ந்த இந்த மாணவியின் பாடல் தான் சோசியல் மீடியாவில் பலருடைய மனதை கவர்ந்தது. இனிமையான, மனதை மயக்கும் குரலுக்கு சொந்தக்காரியான நஸ்ரின் தான் இந்த சீசனில் வெற்றியாளராக வருவார் என்று அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் அவர் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டு ரன்னராக தேர்வானார்.
கலெக்டர் பாராட்டு
தான் வெற்றி பெறவில்லை என்று தெரிந்ததும் குழந்தை நஸ்ரின் அந்த மேடையில் கதறி அழுதது பார்ப்போரையும் ஃபீல் பண்ண வைத்தது. ஆனாலும் அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இசை பள்ளியில் இலவசமாக படிப்பதற்கு அந்த குழந்தைக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல ரவுண்டுகளில் கோல்டு ஷவர் வாங்கிய நஸ்ரின் கடைசி வெற்றி வாய்ப்பை தழுவ விட்டாலும் இப்போது அவரை நேரில் அழைத்த மாவட்ட ஆட்சியர் அவரை பாராட்டி இருக்கிறார்.
சந்தோஷத்தில் நஸ்ரின் பெற்றோர்
அப்போது மாவட்ட ஆட்சியர் முன்பு நஸ்ரின் நான் உங்கள் முன்பு ஒரு பாடல் பாடவா என்று அனுமதி கேட்டு விட்டு "பாடவா உன் பாடலை" என்ற பாடலை பாடி அசத்தி இருந்தார். அந்த பாடலைக் கேட்டு ஆட்சியர் மெய்மறந்து நின்று இருந்தார். அப்போது நஸ்ரின் பெற்றோரும் சந்தோஷத்தில் திகைத்து இருந்தனர். நஸ்ரின் குடும்பத்தினர் மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். நஸ்ரின் தாயும் தந்தையும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அவரை அவருடைய சொந்த குடும்பத்தினர் ஒதுக்கி வைத்திருந்தனர்.
ரசிகர்களின் வாழ்த்துக்கள்
அதே நேரத்தில் நஸ்ரின் அம்மா அவருடைய தெருவில் வசிப்பவர்களுக்கு துணி தைத்து கொடுக்கும் டெய்லர் வேலையை செய்து வருகிறார். அவருக்காக நடிகர் லாரன்ஸ் மாஸ்டர் டெய்லர் கடை ஒன்று வைத்து கொடுத்திருந்தார். இப்போது நஸ்ரினை மாவட்ட ஆட்சியர் அழைத்து பாராட்டியதை பார்த்து அவருடைய பெற்றோர் உள்ளம் மகிழ்ந்திருக்கிறார்கள். அந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவருக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் இவருடைய திறமைக்கு இனி தொடர்ந்து இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications