மீண்டும் சூப்பர் சிங்கருக்கு கெத்தா வந்த பிரியங்கா.. தலையில் ‘குட்டு’ வைத்த சசிகுமார்
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் பிரியங்கா மீண்டும் தொகுப்பாளினியாக கலந்து கொண்டிருக்கிறார். இந்த வாரம் சிறப்பு விருந்தினராக வந்த சசிகுமார் பிரியங்காவின் தலையில் குட்டு வைத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்காவிற்கு கடந்த வாரத்தில் தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பிரியங்கா விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க மாட்டார், அவரை விஜய் டிவியை விட்டு விலக்கி விட்டார்கள் என்றெல்லாம் பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. கடந்த வாரத்தில் பிரியங்காவின் திருமணம் நடைபெற்றதால் கடந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொள்ளவில்லை. இதை காரணம் காட்டி கூட சிலர் பிரியங்கா இனி விஜய் டிவியில் கிடையாது என்றெல்லாம் கூறி வந்தனர்.

சூப்பர் சிங்கர் ப்ரோமோ
ஆனால் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு எப்போதுமே பதில் கொடுக்காமல் செயலால் பதில் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரியங்கா இப்போதும் அதையே செய்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் போயிருந்த பிரியங்கா இப்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் மீண்டும் கலந்து கொண்டிருக்கிறார். அதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
கடுமையான போட்டி
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியில் பைனல் நிகழ்ச்சியில் டிக்கெட் 2 பினாலே இறுதிப்போட்டிக்கான இரண்டாவது பைனல் லிஸ்ட் யார் என்று போட்டி நடைபெறுகிறது. இதில் 90ஸ் கிட்ஸ் பாடல்கள் பாடப்படுகிறது. போட்டியாளர்கள் எல்லோருமே தங்களுடைய பெஸ்டான பாடல்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாரத்தில் இசையமைப்பாளர் ஸாம் ரோல்டன் மற்றும் நடிகர் சசிகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.

சசிகுமார் ரியாக்ஷன்
அதில் சசிகுமாரை வரவேற்கும் போது பிரியங்கா சசிகுமாரை போலவே சிரித்து வரவேற்கிறார். இதனால் கடுப்பான சசிகுமார் பின்னாடி இருந்து வந்து பிரியங்காவின் தலையில் குட்டு வைத்திருக்கிறார். பிறகு இதுதான் என்னுடைய சிரிப்புனு ஊருக்குள்ள... இல்ல, உலகம் ஃபுல்லா பரப்பி விட்டு இருக்கா என்று பிரியங்கா பற்றி சொல்ல, அதற்கு பிரியங்கா சார் இன்னொருமுறை சிரிங்கன்னு எல்லாரும் கேக்குறாங்களே சார் என்று சொல்கிறார்.
உங்கள் கருத்து
அதற்கு சசிகுமார் உன்னை பார்த்து கேட்டா பரவாயில்லமா என்னை கேக்குறாங்க என்று சொல்ல, நடுவர்கள் உட்பட அரங்கத்தில் இருந்த எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரியங்கா மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்தது சூப்பர் என்று நினைக்கிறீர்களா? அல்லது கடந்த வாரத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய லட்சுமி பிரியா சூப்பர் என்று நினைக்கிறீர்களா பாஸ்?
-
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications