இசையமைப்பாளர் தமனின் மனைவி பிரபல பாடகியா..? சூப்பர் சிங்கரில் அறிமுகம்.. கடைசியில் இப்படியா ஆகணும்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் இந்த வாரம் டூயட் ரவுண்ட் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்காக ஆகஸ்ட் 19 மற்றும் 20ஆம் தேதி எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் இசையமைப்பாளர் மற்றும் பாடகராக இருக்கும் தமனின் மனைவி கலந்து கொண்டிருக்கும் நிலையில் தமன் செய்த சொதப்பல்கள் குறித்து அனைவரும் சிரித்து வருகிறார்கள்.
இசைக்கு மயங்காதவர்கள் உலகத்தில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை பலருக்கும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக இசை தான் இருந்து வருகிறது. அதில் ஒரு சிலர் ரசிகர்களின் மனதில் தங்களுக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் இசையமைப்பாளர் மற்றும் பாடகராக இருக்கும் தமன்.
தமனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே அவருடைய தந்தையை இழந்துவிட்டாராம். பிறகு தமன் சிறுவயதில் இருந்து இசைமீது ஆர்வம் கொண்டு இருந்த நிலையில் அவருக்கு பக்கபலமாக இருந்தது பாடகர் எஸ் பி பி பாலசுப்பிரமணியன் தான். எஸ்.பி.பியின் குரூப்பில் டிரம்பராக ஆரம்பத்தில் தமன் வாசித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அதோடு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு தான் ஒரு இசையமைப்பாளராக தமன் களம் இறங்கி இருக்கிறார். ஒரு சில படங்களில் சில பாடல்களை பாடி பாடகராகவும் வலம் வருகிறார். அண்மையில் இவர் விஜய் நடிப்பில் பெரிய அளவில் ஹிட் அடித்த வாரிசு திரைப்பட பாடல்களுக்கு இசையமைத்து பலருடைய பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் நடுவராகவும் இருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் டூயட் ரவுண்டு நடைபெற இருக்கிறது. அதே நேரத்தில் இந்த வாரம் எபிசோட்டில் தமனுடைய மனைவி ஸ்ரீ வர்ஷினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். தமனுடைய மனைவி ஸ்ரீ வர்ஷினி பாடகித்தான். அவரும் ஒரு சில திரைப் பாடல்களை பாடி இருக்கிறார். இந்த தம்பதிக்கு அஷ்யுத் என்ற மகன் இருக்கிறார்.
விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் ஸ்ரீ வர்ஷினி ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதற்குப் பிறகுதான் அவரும் ஒரு பாடகி என்பது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இந்த நிலையில் இந்த வார டூயட் ரவுண்டில் தமனோடு சேர்ந்து ஆராரோ ஆரிரரோ என்ற சிறுத்தை பட பாடலை பாடி இருக்கிறார். இது பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications