சின்ன திரையில் களமிறங்கும் நடிகர் அப்பாஸ்.. இந்த ட்விஸ்ட் எதிர்பார்க்காதது.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: 90ஸ் ஹிட்ஸ் களின் பேவரைட் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அப்பாஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பல ஹிட்டான திரைப்படங்களில் நடித்து வந்த அப்பாஸ் சமீப காலமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர் அப்பாஸ் கலந்து கொள்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் அதிகமாக நட்பு பாராட்டும் திரைப்படங்கள் இடப்பிடித்து இருக்கும். அதில் அதிகமான திரைப்படங்களில் நடிகர் அப்பாஸ் நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் பெரிய ஹீரோக்களின் தம்பியாகவும் குணசித்திர வேடங்களிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அதிகமான ரசிகர்களால் ஆரம்பத்திலேயே அழைக்கப்பட்ட நடிகர்களில் ஒருவர்தான் அப்பாஸ். அந்த அளவிற்கு முன்னணி நடிகராக இருந்த அப்பாஸ் திடீரென்று சினிமாவை விட்டு விலகிப் போயிருந்தார். அதுவும் வெளிநாட்டில் தன்னுடைய குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். அங்கு பெட்ரோல் பங்க், மெக்கானிக் கடைகளில் வேலை செய்து வந்தார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டார் என்று அவர் குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வர, அந்த நேரத்தில் மீண்டும் இந்தியாவிற்கு வந்திருக்கும் அப்பாஸ் அது குறித்து விளக்கம் கொடுத்திருக்கிறார். நான் எப்போதும் சாதாரண ஒரு மனிதனைப் போல வாழ ஆசைப்படுகிறேன். அதனால் தான் கிடைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
தொடர்ச்சியாக சில மாதங்களாக இப்போது பல சேனல்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் அப்பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார். தற்போது இது குறித்த பிரமோ வெளியாகி இருக்கிறது.

இந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 90ஸ் VS 2கே ரவுண்ட் நடைபெறுகிறது. அதில் ஜூனியர்ஸ் சிங்கர் பாட்டு பாடி அசத்துகின்றனர். அப்போது 90ஸ்களில் கனவு நாயகன் என்று அறிமுகம் கொடுத்து கெத்தாக அப்பாஸ் களம் இறங்கி இருக்கிறார். அதோடு மேடையில் மாகாபாவை அடித்து துரத்தி வில்லத்தனம் செய்து மிரட்டி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அங்கு பாட்டு பாடிய ஒரு சிறுமியுடன் குத்தாட்டமும் போட்டு இருக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications