சூப்பர் சிங்கரில் இதுவரை நடக்காத சம்பவம்.. ரஜினி கையெழுத்து போட்ட கிட்டார்.. யாருக்கு தெரியுமா?
சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியின் ஒளிபரப்பு சமீபத்தில் தொடங்கியது. இதில் 6 முதல் 15 வயதிற்குள்ளான குழந்தைகள் கலந்துகொள்கின்றனர். இந்த மேடை இதுவரை ஏராளமான பாடகர்களை தேர்வுசெய்து, இந்த உலகமே திரும்பிப்பார்க்கும் நிலைக்கு அவர்களை புகழின் உச்சிக்கு எடுத்துசென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின் கௌரவமிக்க நடுவர்களாக பிரபல பின்னணி பாடகர்கள் மனோ, சின்னக்குயில் சித்ரா மற்றும் இசையமைப்பாளர் D. இமான் ஆகியோர் உள்ளனர். இந்த சீசனில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு பல நெகிழ்வான கதைகள் உள்ளது. சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தொடங்கும் முன்பு இந்த நிகழ்ச்சி சார்ந்த ப்ரோமோ வெளிவந்தது.

அதில் ராணிப்பேட்டையில் இருந்து நஸிரீன் சேலத்தில் இருந்து ரேணுகா கோவையில் இருந்து ப்ரனேஷ் மற்றும் சென்னையில் இருந்து சாராஸ்ருதி ஆகியோர் இந்த ஜூனியர் போட்டியில் கலந்துகொள்ள அவர்கள் எத்தகைய சவால்களை கடந்து வந்து இதில் பங்கேற்க முடிந்தது என்பதை அழகாக எடுத்துக்கூறியது பார்ப்பவர்கள் நெஞ்சங்களை உருகச்செய்தது. "ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும்" என்ற 'டேக்லைனு'க்கு ஏற்ப அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களும் நிறைய.
அத்தகைய, திறமைமிக்க குழந்தைகளை இந்த மேடை, இந்த உலகிற்கு அறிமுகம் செய்துவைத்து அவர்கள் வெற்றியின் உச்சத்தை அடைய ஒரு சிறு கோலாக உள்ளத்தில் பெருமைகொள்கிறது. இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆரம்பித்து சில வாரங்களே ஆன நிலையில் வரும் டிசம்பர் பனிரெண்டாம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிறப்பு ரவுண்டு இந்த மேடையில் அரங்கேற உள்ளது.
வரும் டிசம்பர் 7, 8 தேதிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் 'சூப்பர் ஸ்டார் ஹிட்ஸ்' ரௌண்டில் குழந்தைகள் சூப்பர் ஸ்டாரின் 'ஹிட்' பாடல்களை தேர்வு செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்தி போட்டியை சந்திக்க உள்ளனர். இதில் சிறப்பாக பாடும் ஒரு குழந்தையை தேர்வுசெய்து அவருக்கு ஒரு பரிசு அளிக்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானே கையெழுத்திட்ட ஒரு கிட்டார் பரிசாக காத்திருக்கிறது. அதை வெல்லப்போவது யார் என்பதை வரும் டிசம்பர் 7, 8, சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10ல் கண்டு ரசிக்கலாம்!
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications