சின்னத்திரையில் மாரி செல்வராஜ்.. சிறுமி சொன்ன வார்த்தை! திணறி போய் விட்டாரே.. கண்கலங்க வைத்த வீடியோ
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சியின் செப்டம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த வாரம் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்தவர்களுக்காக பாடல்களை டெடிகேஷன் செய்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் சிறுமி அஸ்வினி தனக்கு மாரி செல்வராஜ் ரொம்பவே பிடிக்கும் என்று அவருடைய பாடலை பாடி பலரையும் ஃபீல் பண்ண வைத்திருக்கிறார். அவருக்காக மாரி செல்வராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இது ஜூனியர் மற்றும் சீனியர் என்று மாறி மாறி இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த வகையில் சமீபத்தில் தான் சீனியர் சூப்பர் சிங்கர் 9 முடிவடைந்தது. அதை தொடர்ந்து தற்போது ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

அதில் பல குழந்தைகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களுடைய திறமையை நிரூபித்து பலரையும் வியக்க வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வார எபிசோடில் இந்த வாரம் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் சிறுமி அஸ்வினி இயக்குனர் மாரி செல்வராஜ் படங்களில் உள்ள பாடல்களை எடுத்து பாடி வருகின்றார்.
அந்த வகையில் இந்த வாரமும் மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பாடுவது போன்று இருக்கும் தந்தான தானா... என்ற பாடலை உணர்வுபூர்வமாக பாடி முடித்திருக்கிறார். அதோடு நான் இதுவரைக்கும் பாடின பாடல் எல்லாமே மாரி செல்வராஜ் சாரோட பாடல்கள் தான். அதை வீடியோவா சாருக்கு அனுப்பி பார்த்திருப்பாங்க என்று சொல்ல, அந்த நேரத்தில் இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மாரி செல்வராஜ் மேடையில் என்ட்ரி கொடுக்கிறார்.

மாரி செல்வராஜை பார்த்ததும் கண்கலங்கி அழுது அவருடைய காலில் விழ அதை மாரி செல்வராஜ் தடுத்து விடுகிறார். அதைத்தொடர்ந்து அஸ்வினி பேசுகையில், அவர் எனக்காக நேரில் வந்திருக்கிறார் என்பது ரொம்ப ஹேப்பியா இருக்கு என்று சொல்ல, அப்போது மாரி செல்வராஜ்," அஸ்வினி அவளுடைய மேடையை அவளே உருவாக்கி, அதில் அவளே மகாராணியாய் நிற்கிறார் என்பது எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு.." என்கிறார். இப்படியாக உணர்வுபூர்வமான புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications