சூப்பர்சிங்கர் பிரகதி மீண்டும் சபாஷ்.. சோஷியலில் கலக்கும் அடடா ஆல்பம்.. அஸ்வின் சொன்ன "அடடடடா" டாப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரகதி குருபிரசாத், வணக்கம் சென்னை, காதலும் கடந்து போகும், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் பல பாடல்களை பாடியிருக்கிறார்.. தாரை தப்பட்டை படத்தில் சிறிய ரோலில் நடித்த பிரகதி, யுவன் ஹீரோவாக நடித்த படத்தில் லீட் ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சில நாட்கள் ஷுட்டிங் நடத்த நிலையில் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில், பிரகதியின் ஆல்பமும், அதைதொடர்ந்த அவரது பேட்டியும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் 3 சீசனின், மூலம் பாடகியாக பிரபலமானவர் பிரகதி குருப்ரசாத்.. அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பிரகதி குருபிரசாத்.

Television super singer pragathi guruprasad

அமெரிக்காவில் இருந்து விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.. இவரை இன்று வரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். சினிமாவில் மட்டுமல்லாமல், ஆல்பம் பாடல்களையும் அவ்வப்போது பாடி, லைம்லைட்டிலேயே தன்னை வைத்து கொள்கிறார்.

பிரகதி பற்றின பரபரப்பு செய்திகள் இணையத்தில் வெளிவந்து கொண்டேயிருக்கும்.. குறிப்பாக, சினிமாவில் ஹீரோயினாக களமிறங்க போவதாக கூறினார்கள்.. அதற்கேற்றபடி, 'பரதேசி' படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். பிறகு மீண்டும் பாலா இயக்கத்தில் ஹீரோயினாக நடிப்பதாக கூறப்பட்டது.. ஆனால், அந்த திட்டம் கைவிடப்பட்டது.

காதல் கிசுகிசுக்கள்

அதேபோல, பிரகதி நடிகர் அசோக் செல்வனை காதலித்து வருவதாக மற்றொரு தகவல் கசிந்தது.. ஆனால், பிரகதி குருபிரசாத் தன்னுடைய நல்ல தோழி என்று அசோக் தெளிவுபடுத்தியிருந்தார். அதேபோல, அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணத்திலும் பிரகதி அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டு, தன்னுடைய தூய்மையான நட்பை நிரூபித்திருந்தார்.

இதற்கு பிறகு பிரகதி யாரை காதலிக்கிறார்? அவரும் நிச்சயம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றவராகத்தான் இருக்கும் என்று மீண்டும் செய்திகள் கசிந்து கொண்டேயிருந்தன.

ரொமான்ஸ் போட்டோ

சமீபத்தில், தன்னுடைய காதலருடன் ரொமான்ஸ் செய்தபடி எடுத்த போட்டோவை ஷேர் செய்திருந்தார்.. ஆனால், அதில் காதலரின் முகத்தை நிழலில் மறைத்திருந்தார்.. "ஒவ்வொரு நாளும் ஒரு கனவு போல உணரும்போது" என்ற கேப்ஷனை மட்டும் அதற்கு பிரகதி தந்திருந்தார்.. இதைபார்த்த நெட்டிசன்கள், பிரகதி காதலிப்பது, சாம் விஷாலா? என்ற சந்தேகத்தை எழுப்பி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பிரகதி குருபிரசாத், நடிகரும் குக் வித் கோமாளி பிரபலமும் அஸ்வின் குமாருடன் சேர்ந்து ஒரு ஆல்பம் வீடியோவில் நடித்து பாடியுள்ளார். அடடா என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த ஆல்பம் இப்போது யூடியூப்பில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தற்போது, அஸ்வினும், பிரகதியும் இணைந்து பேட்டிகளை தந்து, இணையத்தையே கலக்கி கொண்டிருக்கிறார்கள்.

இணையத்தில் ஷேர் ஆகும் பேட்டி

அதேபோல, Rednool என்ற யூடியூப் சேனலுக்கு பிரகதியும், அஸ்வினும் இருவரும் சேர்ந்து தந்திருக்கும் பேட்டி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.. நிகழ்ச்சியில் கேள்வி பதில் சுற்றில், பிரகதி தன்னுடைய திருமணம் பற்றின ஆசையை சொல்ல, அதற்கு ஒவ்வொரு மாதிரியாக "அடடா" சொல்ல வேண்டும் என்பதுதான், அஸ்வினிக்கு தரப்பட்ட டாஸ்க்.. இந்த டாஸ்க்கை இருவருமே சிறப்பாக செய்திருந்தனர்..

முக்கியமாக பிரகதி பேசும்போது, "நான் கல்யாணம் பண்ணிக்க போற பையன் லாயலா இருக்கணும், ரொம்ப கேரிங்கா இருக்கணும், ரெஸ்பக்ட்ஃபுல்லா இருக்கணும், பாரிஸ் ஈபிள் டவரில் கல்யாணம் நடக்கணும்" என்று ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல, அதற்கெல்லாம் அஸ்வின் "அடடா" என்று வியந்து சொல்கிறார்.. ஒவ்வொரு கேள்விக்கும், ஒவ்வொரு மாடுலேஷனில் அஸ்வின் சொன்ன அடடா பதிலை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி

முன்னதாக ஒரு பேட்டியில் அஸ்வின் சொல்லும்போது, "வெளியேயிருந்து பார்க்கும்போது நான் சினிமாவை விட்டு சென்று விட்டேனோ? வாய்ப்புகள் கிடைக்கவில்லையா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், அவரவர் வாழ்க்கைக்குள் சென்று பார்த்தால்தான், ஒவ்வொருவரும் என்ன மாதிரியான கஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரியும். நான் இங்கேதான் இருக்கப்போகிறேன். என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் உள்ளேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+