உழைப்பின் வளர்ச்சி இதுதான்.. நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி- செந்தில் கணேஷா இது.. அலப்பறையை பாருங்க
பெர்ன்: சூப்பர் சிங்கர் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஜோடி தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ளார்கள். எங்கே தெரியுமா?
ராஜலட்சுமி - செந்தில் ஜோடி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமா பாடல்களை பாடாமல் அவர்களாகவே உருவாக்கிய கிராமிய பாடல்களை பாடி நடுவர்களின் பாராட்டுகளை பெற்றனர்.
அதிலும் செந்தில் தனது தாயை நினைத்து உருகி உருகி எழுதி பாடிய ஒரு பாடல் அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்துவிட்டது. விஜய் டிவியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோருக்கு வெள்ளித்திரையில் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கின்றன.

சூப்பர் சிங்கர் ஜோடி
அந்த வகையில் ராஜலட்சுமி செந்தில் ஜோடிக்கு ஏய் ஏய் சின்ன மச்சான் என்ற பாடல் வாய்ப்பு கிடைத்தது. அந்த பாடல் ஹிட்டானதை அடுத்து ராஜலட்சுமிக்கு புஷ்பா படத்தில் ஹே சாமி பாடல் கிடைத்தது. இந்த பாடல் பயங்கர ஹிட்டடித்தது. எந்த கலை நிகழ்ச்சிகளில் பார்த்தாலும் இந்த பாடல்தான் ஒலித்தது.

7 மணி நேரம்
இந்த பாடலை பாட அவருக்கு 7 மணி நேரம் ஆனது என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் வெளிநாடுகளிலும் போய் கச்சேரியில் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் தற்போது செந்தில் - ராஜி ஜோடி ஸ்விட்சர்லாந்து சென்றுள்ளனர். பனி பிரதேசமான ஸ்விட்சர்லாந்தில் இருவரும் பல புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

இன்ஸ்டாவில் பதிவு
அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து மகிழ்ந்துள்ளனர். இந்த ஜோடிக்கு லைக்ஸ்கள் குவிகின்றன. கிராமத்தில் பிறந்து வளர்ந்து கிராமிய பாடல்களால் இன்று உலக நாடுகளுக்கு பிஸியாக பறந்து கொண்டிருக்கும் ராஜலட்சுமி- செந்தில் தம்பதியை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

புஷ்பா பாடலுக்கு நடனம்
அத்துடன் இவர்கள் இருவரும் சேர்ந்து ஏய் சாமி பாடலுக்கு ஒரு தொங்கும் பாலத்தில் நடனமாடி வீடியோவையும் பதிவு செய்துள்ளனர். கண்ணுபட போகுது அக்கா அன்ட் அண்ணா என ரசிகர்கள் பலர் கமென்ட் செய்துள்ளார்கள். மேலும் ஊருக்கு ஏற்ப உடைகளை மாற்றி கொள்வதையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். விருமன் படத்தில் மதுரவீரன் என்ற பாடலை அதிதி பாடி இருக்கிறார்.

விருமன் பாடல்
ஆனால் இந்த பாடலை பாட முதலில் ராஜலட்சுமிக்குதான் வாய்ப்பு கொடுக்கப்பட்டதாம். அதோடு இவர் அந்த பாடலை பாடி முடித்த நிலையில் அதை நீக்கிவிட்டு அதிதியை வைத்து பாடியுள்ளதாக ஒரு சர்ச்சை எழுந்தது. இதற்கு ராஜலட்சுமி விளக்கம் அளிக்கையில் ஒரு மாதத்திற்கு முன்னர் யுவன் சங்கர் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது.

ராஜலட்சுமி கூறிய விளக்கம்
மதுரவீரன் பாடலை பாடி கொடுக்கச் சொன்னார்கள். நானும் பாடினேன். ஆனால் நான் பாடிய பாட்டு அதிதி குரலில் வெளியாகியுள்ளது. இதை யாரும் பெரிதுப்படுத்த வேண்டாம். அந்த பாடலுக்கு யாருடைய குரல் பொருத்தமாக இருக்கும் என்பதை இசையமைப்பாளர்தான் முடிவு செய்வார். அதன்படி என்னுடைய குரல் அந்த பாடலுக்கு செட் ஆகாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்கு பாட்டு நீக்கப்பட்டுள்ளது. அதிதி அந்த பாடலை நன்றாகத்தான் பாடியுள்ளார். பாட்டு திரையில் வந்ததோ வரலையோ ஆனால் என் குரல் எப்படி இருக்கும் என்பதை யுவன் முன்பு பதிவு செய்துவிட்டேன், அது போதும் என ராஜலட்சுமி தெரிவித்திருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications