இளையராஜா இப்படி செய்வாருனு நினைக்கல.. அவரால் தான் இந்த நிலைமை! கண்கலங்கிய பாடகர் மனோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வாரம் பாடகர் மனோவை கவுரவிக்கும் வகையில் அவருடைய பாடல்கள் சுற்று நடைபெறுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மனோ இசையமைப்பாளர் இளையராஜா குறித்து பேசி கண்கலங்கி இருக்கிறார்.
தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இளையராஜா தனக்காக செய்த செயல்களை சொல்லி மனோ கண்கலங்கி இருந்த நிலையில் அதிகமான ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பாடகர் மனோ தன்னுடைய பாடல்கள் மற்றும் நடிப்பின் மூலமாக பலருக்கு பரீட்சயமாகி இருக்கிறார். ஆனால் அவருடைய நிஜ பெயர் நாகூர் பாபு தானாம். இவர் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி என்ற இடத்தில் பிறந்திருக்கிறார். அதுபோல மனோவின் அம்மா ஷாகிதா ஆந்திராவில் அந்த காலத்தில் பாப்புலரான மேடை நடிகையாக இருந்திருக்கிறார்.
அதுபோல மனோ 1970 ஆம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். பிறகு சிறுவயதிலேயே கர்நாட்டிக் உட்பட எல்லா இசைகளையும் கற்று தேர்ந்தெடுக்கிறார். அதற்குப் பிறகு இவர் பாசில் இயக்கத்தில் வந்த பூவிழி வாசலிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார். அதுபோல இளையராஜா தான் நாகூர் பாபு என்ற இவருடைய பெயரை மனோ என மாற்றி இவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

அதற்கு பிறகு தான் மதுர மரிக்கொழுந்து வாசம், தேன்மொழி, அண்ணே அண்ணே உட்பட பல பாடல்கள் மனோவை பிரபலமாக்கி இருக்கிறது. அதுபோல மனோ பாடகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் நடிகராகவும் இருந்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தெலுங்கில் நடித்து வெளியாகும் திரைப்படங்களுக்கு அவருக்கு தெலுங்கில் டப்பிங் பேசியவர் மனோதானாம். அதுபோல நடிகர் கமல்ஹாசனுக்கும் சதிலீலாவதி மற்றும் பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் மனோ டப்பிங் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் மனோ இதுவரைக்கும் 35,000 பாடல்களுக்கு மேலே பாடி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் 3000-க்கும் மேற்பட்ட இசை கச்சேரிகளையும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் சில சீசன்களாக இவர் இந்த நிகழ்ச்சியில் வரவில்லை. அந்த நேரத்தில் தான் இப்போது மனோவை பெருமை படுத்தும் விதமாக ராக் ஸ்டார் மனோ என்ற தலைப்பில் இந்த வாரம் பாடல் சுற்றி நடைபெறுகிறது.
அதில் சிறப்பு விருந்தினராக மனோ கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் மேடையில் பேசும்போது இளையராஜா குறித்து பேசி கண் கலங்கி இருக்கிறார். அதில் எனக்கு இசை பிச்சை போட்டவர் இசைஞானி இளையராஜா தான் நான் உங்களை எப்போது மறக்க மாட்டேன் ஐயா என்று கண்கலங்கி பேசியிருக்கிறார். இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications