சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. தொடங்கியது 10வது சீசன்.. இந்த முறை இவ்வளவு விஷயம் இருக்கா?
சென்னை: விஜய் டிவியில் ஒவ்வொரு ஆண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இப்போது சூப்பர் சிங்கர் சீனியர் 10 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.
சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 நிகழ்ச்சி முடிவுக்கு வந்திருந்தது. அதை தொடர்ந்து சீனியர்களுக்கான நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது.
சூப்பர் சிங்கர்ஸ் சீனியர் 10 எப்போது தொடங்க இருக்கிறது. அதில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தது. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் சீனியர் மற்றும் ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பாகி வரும்.
அந்த வகையில் சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் சீசன் 9 ஜூனியர்களுக்கான இறுதி சுற்று முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் சீனியர்களுக்கான நிகழ்ச்சி வரும் டிசம்பர் 16, 2023 முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் பல வெற்றிகரமான சீசன்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் திரைத்துறையில் பின்னணி பாடகர்களாக ஜொலித்து வருகிறார்கள். அதிலும் அடித்தட்டு வாழ்க்கையில் இருப்பவர்களும், வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களும் திறமையின் அடிப்படையில் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலமாக இன்று புகழின் உச்சத்தில் வலம் வருகிறார்கள்.

அந்த வகையில் இதற்கு முந்தைய சீசன்களில் வெற்றியாளராக முதல் சீசனில் கிருஷ்ணமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அல்கா அஜித், ஆஜீத், ஸ்பூர்த்தி, பிரித்திகா, கிரிஷாங் மற்றும் ஸ்ரீனிஷா என்று பல பாடகர்களை இந்த மேடை உருவாக்கி இருந்தது. அதுபோல ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா, டி இமான், யுவன் சங்கர் ராஜா, அனிருத், ஏ ஆர் ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடகர்களுக்கு பாடும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

அதுபோல ஆரம்பத்தில் இருந்தே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல பிரபலங்கள் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போதைய சூப்பர் சிங்கர் சீனியர் 10 நிகழ்ச்சியையும் மாகாபா மற்றும் பிரியங்கா தேஷ் பாண்டே தொகுத்து வழங்குகிறார். அதோடு இந்த சீசனில் பின்னணி பாடகர்களாக மனோ, சுஜாதா, அனுராதா, ஸ்ரீராம் மற்றும் சீன் ரோல்டன் ஆகியோர் நடுவர்களாக இருக்கின்றனர்.

அதுபோல தற்போது இந்த நிகழ்ச்சிக்கான பல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பழைய சிறுவாங்கூரை சேர்ந்த ஜான் என்பவர் பாடிய பச்சைமலை தேனு என பாடலை கேட்டு பாடகர் மனோ, நீ மறைந்த எஸ்பிபி அண்ணாவை நினைவு படுத்திட்ட என்று உணர்வுபூர்வமாக பேசி இருப்பார். தற்போது இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபோல இன்னும் பல பாடகர்கள் தங்களுடைய திறமையை காட்டி இருக்கிறார்கள். அதை நாளை முதல் பார்க்க ரெடியா மக்களே...
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications