Super Singer: சூப்பர் சிங்கரில் இளையராஜா மாதிரி பாடுவாரே சரண் ராஜா, அவர் வாழ்வில் இத்தனை சோகமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கரில் சீனியர்களுக்கான பதினொன்றாவது சீசனில் சரண் ராஜா என்ற போட்டியாளர் அனைவரையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் இளையராஜா போலவே பாடல் பாடி பல ரசிகர்களின் மனதில் தனி ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இந்த வாரம் நிலா பாடல்கள் ரவுண்டு நடைபெறும் நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை சரண்ராஜா மனம் திறந்து பகிர்ந்து இருக்கிறார்.
தற்போது சின்னத்திரையில் புதிது புதியதாக பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அதிலும் ஒரு நிகழ்ச்சி ஹிட் ஆகிவிட்டால் அதில் அடுத்தடுத்த சீசன்களும் வரிசைகட்ட தொடங்கி விடுகிறது. அதேபோலத்தான் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பெரிய அளவில் பெயர் வாங்கியது. அதனாலயே இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

அதில் இப்போது சீனியர்களுக்கான 11 வது சீசன் வந்திருக்கிறது அதில் இளையராஜாவைப் போலவே பாட்டு பாடும் சரண்ராஜாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதுபோல பாடகி தவசீலிக்கும் சோசியல் மீடியாவில் அதிகமான ரசிகர்களை பெற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவடைய இருக்கும் நிலையில் இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் நிலா பாடல் ரவுண்டு நடைபெறுகிறது. அதில் எல்லா போட்டியாளர்களும் நிலாவை வர்ணித்து வரும் பாடல்களை பாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இளையராஜாவை போலவே ஒவ்வொரு ரவுண்டிலும் பாடல்கள் பாடி கொண்டிருக்கும் சரண் ராஜா இந்த ரவுண்டில் "பொட்டு வெச்ச ஒரு வட்ட நிலா" என்ற பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடலை பாடிவிட்டு அதற்கு பின்னால் இருக்கும் வலி நிறைந்த நினைவுகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
அதாவது சரண் ராஜா ரொம்பவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் சின்ன வயசுல இருக்கும்போதே அவருடைய உறவுக்கார ஒரு பெண்ணை தான் காதலிச்சாராம். முதலில் அந்த பொண்ணு இவரை சுற்றி வந்திருக்கிறார், இவருக்கும் அந்த பெண்ணை பிடிக்கும் என்பதால் நான்கு வருடமாக இவர்கள் இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள். இருவருக்கும் நல்ல புரிதல் இருந்தாலும் திடீரென்று சில நாட்கள் அந்த பெண் இவரிடம் பேசவில்லையாம்.
என்னவென்று விசாரித்த போது அந்த பெண் எனக்கு இன்னொருத்தரை பிடிச்சிருக்கு மாமா என்று சொல்லிவிட்டாராம். பிறகு பிடிக்கவில்லை என்றால் நாம் அவங்களை தொந்தரவு பண்ணக்கூடாது என்று சரண் ராஜாவும் விலகிவிட்டாராட்டாராம். ஆனால் நினைவுகள் நம்மை விட்டுப் பிரியாது அதேபோல எனக்கு பொட்டு வச்ச வட்ட நிலா பாடலும் அவளுடைய நினைவுகளும் மனதிற்குள் ஒரு மாதிரி பண்ணுகிறது. அதனால் இந்த பாடலை நான் இந்த ரவுண்டில் பாடினேன் என்று சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே இவர் ஒரு முறை தன்னுடைய அப்பா பற்றி பேசும்போது கண்கலங்கி அழுதிருந்தார். அப்போது கூட பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லியிருந்தனர். சரண் ராஜாவின் அப்பாவிற்கு சரண் பேராசிரியராக வேண்டும் என்பதுதான் ஆசையாம். ஆனால் சரண்ராஜாவிற்கு படிப்பை விட பாடல் பாடுவது ரொம்ப பிடிக்கும் என்பதால் அவர் படிப்பை விட்டு விட்டு பாடல் பாட வந்துவிட்டாராம்.
படிக்கவில்லை என்றாலும் இவருக்கு புத்தகம் படிப்பதும் பிடிக்குமாம், அதேபோல கவிதையும் எழுதுவாராம். இவருடைய கவிதைகள் வேர்ல்ட் புக் ரெக்கார்ட்டில் இடம் பிடித்திரக்கிறதாம். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 12க்கும் மேலே விருது வாங்கி இருக்கிறாராம். ஆனாலும் ஒரு நாள் அந்த பேராசிரியர் சீட்டில் உட்கார்ந்து அதில் வரும் சம்பளத்தை வாங்கி என்னுடைய அப்பாவிடம் கொடுத்து, அப்பா நீ ஆசைப்பட்ட சம்பளம் என்று சொல்லவேண்டும் என்பது என்னுடைய ஆசை என்றும் சொல்லியிருந்தார். இப்போது தன்னுடைய காதல் நினைவுகள் குறித்து உருக்கமாக பகிர்ந்து இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications