பேட்டியில் ராஜலட்சுமி சொன்ன அந்த வார்த்தை! அதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை! செந்தில் கணேஷ் வருத்தம்
சென்னை: விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று இப்போது சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் தம்பதியினர் தாங்கள் கொடுத்த பேட்டியால் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்கள்.
திறமையும் அதற்கு ஏற்ற உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி தங்களை தேடி வரும் என்று சொல்வார்கள். அது பலருடைய வாழ்க்கையில் நடைபெற்று இருக்கிறது. அதில் ஒருவர் தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதி.

இந்த தம்பதி நாட்டுப்புறப்பாடல்களையும், திரைப்பட பாடல்களையும் கிராமங்களில் திருவிழாக்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் பாடி வந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இவர்களுடைய வாழ்க்கையை மொத்தமாக மாற்றியது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தம்பதி போட்டியாளராக கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்து ரசிகர்களின் சப்போர்ட் அமோகமாக இருந்தது. இவர்கள் இருவரும் நிகழ்ச்சியில் பாட்டு பாடியது மட்டுமல்லாமல் கலகலப்பாக பேசியும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தனர்.

தொகுப்பாளராக இருந்த பிரியங்கா செந்தில் கணேஷை கலாய்ப்பது, அதற்கு ராஜலட்சுமி செல்லமாக கோபப்படுவது போன்ற கிளிப்ஸ் அந்த நேரத்தில் வைரலானது. ஆறாவது சீசனில் ராஜலட்சுமி மற்றும் செந்தில் தம்பதி டைட்டில் வின்னராக தேர்வானார்கள். இவர்களுக்கு 50 லட்சத்திற்கான வீடு பரிசாக கொடுக்கப்பட்டது. இது பற்றி கூட சில மாதங்களுக்கு முன்பு விளக்கம் கொடுத்தனர்.
50 லட்சம் பரிசு பெற வேண்டும் என்றால் அதற்கு 18 லட்சத்திற்கு வரி செலுத்த வேண்டும். அதனால் எங்களிடம் நீங்கள் 18 லட்சம் செலுத்தி 50 லட்சத்திற்கான வீட்டை பெற்றுக் கொள்கிறீர்களா? அல்லது 18 லட்சத்தை கழித்துவிட்டு மீதி உள்ள தொகைக்கு வீடு வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டார்கள் நாங்கள் மீதி உள்ள தொகைக்கு வீடு வாங்கி கொண்டோம். அந்த வீடு சென்னையில் இருக்கிறது.

சென்னையில் சூட்டிங் நடைபெறும் போது அந்த வீட்டுக்கு போவோம் என்று கூறியிருந்தார்கள். அதுபோல செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி பல ஹிட் பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கூட புஷ்பா 2 திரைப்படத்தில் இடம்பெற்ற பீலிங் பாடல் இவர்கள் பாடியதுதான்.
அது மட்டும் அல்லாமல் பேட்டிகளிலும் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பேட்டியில் பேசும்போது நாங்க எங்க சொந்த ஊரில் வீடு கட்டினோம் அப்போது இஎம்ஐ (EMI) போட்டு இருந்தோம் ஆனாலும் கொஞ்சம் கடன் வந்தது என்று ராஜலட்சுமி பேசி இருக்கிறார். இதுதான் எனக்கு பெரிய பிரச்சனையாகிவிட்டது என்று செந்தில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் செந்தில் கணேஷ் பேசுகையில், ராஜலட்சுமி எதார்த்தமாகத்தான் அந்த பேட்டியில் நாங்கள் வீடு கட்டும் போது கொஞ்சம் கடன் வாங்கினோம் என்று சொல்லி இருந்தார். ஆனால் சில சேனல்கள் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் குடும்பத்தினர் கடனில் தவிக்கிறார்கள், அவர்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் என்று ஷெட்டிங் கொடுத்து விட்டார்கள். இது எங்க வீட்டில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது.
நாங்க இந்த மாதிரி விஷயங்களை பெரிதாக எடுக்காமல் கடந்து போக கற்றுக் கொண்டோம். ஆனால் எங்களுடைய குடும்பத்தினர்களுக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. ஐயோ நம்ம பிள்ளைங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க போல என்று அவங்க ரொம்ப பயப்பட தொடங்கிட்டாங்க.

அதுபோல எங்களை பற்றி இணையத்தில் ஏதாவது செய்திகள் வரும்போது எங்களுடைய பெற்றோர் அதை சொல்லி ரொம்ப வருத்தப்படுறாங்க. அதற்கு பிறகு அவர்களை சமாதானம் படுத்துவதற்கே எங்களுக்கு சில வாரங்கள் ஆகி விடுகிறது. அதனாலேயே ஏதாவது பேச வேண்டும் என்றாலும் ரொம்ப பயந்து தான் பேச வேண்டியது இருக்கு.
எங்களுடைய அப்பா அம்மா இன்னும் கிராமத்தில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளி உலகம் பெரியதாக தெரியாது. இதுபோன்று வெளிவரும் செய்திகளை உண்மை என்று நம்பி விடுகிறார்கள். நாங்கள் கடனில் இருக்கிறோம் என்று சொன்ன விஷயத்தை மட்டும் அல்ல எங்களை பற்றி அடிக்கடி பல வதந்திகள் பரவி வருகிறது, அது எங்களுடைய குடும்பத்தை கஷ்டப்பட வைக்கிறது என்று அந்த பேட்டியில் செந்தில் கணேஷ் வருத்தத்தோடு பேசி இருக்கிறார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications