சூப்பர் சிங்கர் அஜய் வீட்டில் மகிழ்ச்சி செய்தி.. எளிமையாக நடந்த கொண்டாட்டம்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த அஜய் கிருஷ்ணா தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளோடு கேக் வெட்டி தன்னுடைய மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார்.
சமீபத்தில் தான் அஜய் கிருஷ்ணாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தை பிறந்து அரை வருடம் ஆகிவிட்டது என்று அதை கொண்டாடி இருக்கின்றனர்.

அத்தோடு அது குறித்து நெகிழ்ச்சியான கேப்ஷனும் கொடுத்திருக்கின்றனர். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் பல வருடங்களாக பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியில் ஒன்றாக தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக பலர் புகழின் உச்சியில் வலம் வருகின்றனர். ஆரம்பத்தில் தங்களுடைய திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பலரும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக இன்று பல திரைப்படங்களில் பின்னணி பாடகர்கள் ஆக மாறி இருக்கின்றனர்.
அதற்கு எடுத்துக்காட்டாக பலரை சொல்லலாம். அந்த வகையில் ஒருவர்தான் அஜய் கிருஷ்ணா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் பலருடைய பேரும் ஆதரவை பெற்றவர் அஜய் கிருஷ்ணா. பிரபல பாடகர் உதித் நாராயணன் போல அப்படியே பாடி பலரையும் அசத்தி வருகிறார்.
அஜய் கிருஷ்ணா சென்னையை சேர்ந்தவர்தான். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாகத்தான் மீடியாவிற்குள் நுழைந்தார். அதோடு அஜய் கிருஷ்ணா நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் தான். அதிகமான கஷ்டங்களை தாண்டி தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறார். இப்போது இவருக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பல மேடை நிகழ்ச்சிகளிலும் அஜய் கிருஷ்ணா பாடிக் கொண்டிருக்கிறார். அத்தோடு வெள்ளித்திரையிலும் பிரபல பாடகராக ஜொலித்து வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளம் மூலமாக அறிமுகமான ஜெஸ்ஸி என்பவரை அஜய் கிருஷ்ணா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த காதல் தம்பதி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருவார்கள். அது அதேபோல தங்களுடைய சுக துக்கங்களையும் தன்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்புதான் இந்த தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அந்த குட்டி குழந்தைக்கு இப்போது அரை வயது ஆகிறதாம். அதை தங்களுடைய குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில் குட்டி குழந்தைக்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications