''கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனா.. வித்யாசமாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன நடிகர் ரஜினி
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளார்.. தான் நடித்த பாட்ஷா படத்தில் இடம்பெற்றிருந்த வசனத்தை சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இந்த புத்தாண்டு வாழ்த்தினை நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டு நிறைவடைந்த 2025ம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு நள்ளிரவில் புத்தாண்டு பிறந்ததும் இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்கள், அதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் கூடும், பொது இடங்களிலும் மக்கள் கூடி 2025ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்று வருகிறார்கள்.
முதல்வர் வாழ்த்து: அதேபோல, தமிழக மக்களுக்கு தலைவர்கள் பலரும் தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், "புத்தாண்டு புதிய வெற்றிகளுக்கு வித்திடுவோம், எங்கும் நலமே சூழட்டும்," என்றும் வாழ்த்தி உள்ளார்.
அதேபோல, தவெகா தலைவர் விஜய், புத்தாண்டு வாழ்த்து கூறியிருக்கிறார். அவர் தன்னுடைய வாழ்த்து செய்தியில், "மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள். மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம். உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை. சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்: அதேபோல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்தை கூறியிருக்கிறார்.. பொங்கல், தீபாவளி, மற்றும் புத்தாண்டு தினங்களில், தன்னுடைய ரசிகர்களை ரஜினி சந்தித்து வாழ்த்து கூறுவது வழக்கமாகும். இதற்காகவே, சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ரஜினிகாந்தை சந்திக்க அவரது ரசிகர்கள் அதிகாலையிலேயே வருகை தருவார்கள்.. ரஜினியின் வாழ்த்தை பெறுவதற்காக, நள்ளிரவு முதலே சிலர் காத்து கிடப்பார்கள்.
கடந்த வருடம்கூட, தன்னுடைய வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
பாட்ஷா வசனம்: இந்நிலையில், நடிகர் ரஜினி 2025 ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்... அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தான் நடித்த பாட்ஷா படத்தில் இடம்பெற்றிருந்த வசனத்தை குறிப்பிட்டு, இந்த புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புபுத்தாண்டு நல்வாழ்த்துகள். #Welcome2025" என தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications