நொங்கு நொங்குன்னு நெஞ்சில குத்தி.. கூலியில் சத்யராஜ் நடிக்க காரணம்? அதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சென்னை: வில்லன் கதாபாத்திரம் என்பது ஹீரோவுக்கு நிகரானது.. அதை அன்று சிவாஜியில் நடிப்பதை மறுத்துவிட்டு, இன்று ஒரு சாதாரண நண்பன் கேரக்டரில் நடிக்க சத்யராஜ் ஒப்புக் கொண்டிருக்கிறார். எதற்காக ஒப்புக் கொண்டார் என்று தெரியவில்லை என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார்.. அத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பெருந்தன்மை குறித்தும் தன்னுடைய பேட்டியில் பேசியிருக்கிறார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு என்ற பேட்டி தந்துள்ள தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "ரஜினிகாந்த்தும், சத்யராஜூக்கும் எந்த மோதலும் கிடையாது.. ரஜினியின் ஆரம்ப கால படங்களில் சத்யராஜ் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.. ஒருகட்டத்தில் புகழ்பெற்று உயர்ந்ததுமே,

மிஸ்டர் பாரத் என்ற படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார் சத்யராஜ்.. அதில் இவர்கள் 2 பேரின் கேரக்டர்களுமே நன்றாக இருக்கும்.. அந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்ததால், சத்யராஜுக்கு பாப்புலாரிட்டி கிடைத்தது.. ரஜினியால் கிடைத்த புகழ் வெளிச்சத்தால், நிறைய படங்களில் சத்யராஜ் நடிக்க துவங்கினார்..
மேடைக்கு மேடை ரஜினிகாந்த்தை விமர்சனம்
ரஜினிகாந்த் மீது சத்யராஜுக்கு என்ன கோபம் இருந்தது? என்று தெரியாது. அது என்னவென்று தெரியாமல் நாமளாகவே பேசக்கூடாது. ஆனால், ரஜினி மீது ஏதோ ஒரு கோபம் சத்யராஜுக்கு இருந்துகொண்டேயிருந்தது.. எனவே எந்த மேடை கிடைத்தாலும், ரஜினியை தாழ்த்தி சத்யராஜ் பேசிக் கொண்டேயிருந்தார்..
ஆனால், தன்னுடைய அப்பாவுக்கும், ரஜினிகாந்த்துக்கும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடு இருந்ததே தவிர, வேறு எந்த மோதலும் கிடையாது என்று நடிகர் சிபி ராஜ் காரணம் சொல்கிறார்.. அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.. அதுக்காக ரஜினிகாந்த்தை மேடைக்கு மேடை ஏறி வந்து அவமானப்படுத்த வேண்டும் என்ற தேவை ஏன் வந்தது? அதிலும் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி ரஜினியை விமர்சித்து பேசினார்.
சிவாஜி படத்தில் என்னாச்சு
இதற்கு நடுவில், ரஜினியை வைத்து சிவாஜி படம் எடுக்க தயாராகும்போது, வில்லன் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் ஷங்கர் நினைத்தார்..
இதற்காக சத்யராஜிடம் அணுகி கதையை சொன்னபோது, "நான் இன்று ஹீரோவாக இருக்கிறேன்.. ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டுமானால், நான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பாரா" என்று கேட்டுள்ளார்.. இதைக்கேட்டு ஷங்கரே ஷாக் ஆயிட்டாரு.
"சிவாஜி படத்தில் எனக்கு நிகராக சம்பளம் கொடுக்க முன்வந்தபோதுகூட, சத்யராஜ் அதில் நடிக்க மறுத்துவிட்டார். அப்படிப்பட்ட மனிதர் சத்யராஜ்" என்று என்று கூலி பட ஆடியோ விழாவில் பெருமிதமாக ரஜினி கூறியிருந்தார். ரஜினியின் ரசிகர்கள் எப்போதுமே சத்யராஜ் மீது கோபத்தில் இருப்பதால், அதை பெரிதுப்படுத்தாமல் கடந்து போக வேண்டும் என்பதற்காகவே ரஜினி இப்படி சொன்னார்.
80 கோடி சத்யராஜூக்கா?
சிவாஜி படத்தின்போது, ரஜினிக்கு 80 கோடி ரூபாய் சம்பளம்.. இப்படியொரு நிகரான சம்பளத்தை எந்த தயாரிப்பாளர் யாராவது சத்யராஜுக்கு தருவார்களா? எந்த காலத்திலும் ரஜினிக்கு நிகரான சம்பளத்தை தரவே மாட்டார்கள்.. சத்யராஜ் நல்ல நடிகர் என்றாலும், நிறைய வெற்றி படங்களை தந்திருக்கிறார் என்றாலும், ரஜினிக்கு இருக்கும் மாஸ், ஓபனிங் சத்யராஜூக்கு இருக்கிறதா?
கூலி படத்தின் கதையை ரஜினியிடம் , நண்பன் கேரக்டருக்கு சத்யராஜை பயன்படுத்தலாமா? என்று லோகேஷ் தயங்கி தயங்கி கேட்டிருக்கிறார்.. உடனே ரஜினி, உங்களுக்கு ஓகே என்றால், எனக்கும் ஓகேதான் என்றார்..
வில்லன் கதாபாத்திரம் என்பது ஹீரோவுக்கு நிகரானது.. அதை அன்று சிவாஜியில் நடிப்பதை மறுத்துவிட்டு, இன்று ஒரு சாதாரண நண்பன் கேரக்டரில் நடிக்க சத்யராஜ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அரசியல் நிலைப்பாடு என்ன
நொங்கு நொங்குன்னு நெஞ்சில குத்தி சாவடிக்கிறாங்க, 2 சீன்ல வந்து நடந்து போறாரு.. இதுல ஏன் சத்யராஜ் நடிக்கணும்? அரசியல் கொள்கைதான் இவர்களுக்குள் பிரச்சனை என்றால், அன்று ஏன் ரஜினியுடன் நடிக்க மறுக்க வேண்டும்? இன்று ஏன் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டும்? அப்படியானால் சத்யராஜின் அரசியல் கொள்கைதான் என்ன? ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறார் என்றால் அதை யாரும் விமர்சிக்க போவதில்லையே?
5 கோடி சம்பளத்துக்காக கூலியில் சத்யராஜ் நடிக்க ஒப்புக் கொண்டாரா? லோகேஷ், ரஜினி, அனிருத் கூட்டணியில் கூலி படம் எதிர்பார்ப்பு உள்ளதால், அதில் நடிக்க ஒப்புக் கொண்டாரா? தெரியவில்லை.. ஆந்திராவில் புரமோஷனில் மேடையில் டான்ஸ் ஆடுகிறார் சத்யராஜ்.. ஆந்திராவில் ஆடினால் இங்கே தெரியாதா? அப்படியானால் கேரக்டரை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி கொள்வதா?" என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications