வனிதாவுடன் குத்தாட்டம் போடுவது யாரு.. சுரேஷ் தாத்தாவா ... வேற லெவல் சித்தப்பு.. கலக்குங்க !
சென்னை: பாவாடை தாவணியில் வனிதாவும், தலையில் முடியோடு இளம் வயது ஹீரோவாக மாறிய சுரேஷ் சக்கரவர்த்தியும் போட்ட குத்தாட்ட போட்டோவை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் அடடே என்று பாராட்டி வருகின்றனர்.
இதைப் பார்த்து ரசிகர்கள் ஸ்வீட் ஷாக் ஆனாலும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடிகள் டான்ஸில் பலரும் பல விதமான கெட்டப்பில் அசத்திக் கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த வயதிலும் நான் இளமைதான் என துள்ளல் ஆட்டம் போட்டு இருக்கிறார் சுரேஷ்.

செம டான்ஸ்
அவரது போட்டோஸ்கள் தான் தற்போது நெட்டிசன்கள் கையில் கிடைத்த பொக்கிஷமாக மாறியிருக்கிறது, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் .சும்மாவே இவரை கலாய்த்து வந்த நெட்டிசன்கள் தற்போது நல்ல கன்டன்ட் கிடைத்துவிட்டது என என்ஜாய் பண்ணி தங்களால் முடிந்த வரைக்கும் சம்பவம் பண்ணிக்கொண்டு இருக்கின்றனர்.

மீண்டும் பார்த்ததால் குஷி
நெட்டிசன்கள் அப்படி என்றால் ரசிகர்கள் இவரை இந்த மாதிரி மீண்டும் பார்த்ததால் குஷியாகி நீங்க கலக்குங்க தாத்தா வேற லெவல் பர்பாமன்ஸ் என இவருக்கு எனர்ஜி ஊட்டி வருகின்றனர் . எப்போதுமே தனக்கு வரும் நெகட்டிவ் கமெண்டுகளை பற்றி கண்டுகொள்ளாத இவர் தற்போது தன்னுடைய திறமையை நிரூபிக்கும் வகையாக போட்டிப்போட்டு இளம் ஜோடிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரும் வனிதாவும் தான் குத்தாட்டம் போட்டு பலருடைய மனதில் இடத்தை பிடித்திருக்கின்றனர்.

ஹிட் சீசன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோக்கள் எல்லாமே சூப்பர் ஹிட் தான். அதிலும் பிக்பாஸ்க்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது . இந்த நிகழ்ச்சியைப் பற்றி பலரும் நெகட்டிவ் கமெண்ட் போட்டு வந்தாலும் இதற்கு ரசிகர்கள் வட்டாரம் மிக மிக அதிகம். அதனால் தான் தொடர்ந்து அடுத்தடுத்து சீசன்கள் சூடு பிடித்து வருகின்றன. இதில் கலந்து கொண்ட அனைவரையும் மீண்டும் விஜய் டிவியில் ஆடவைத்து உள்ளனர்.

செம பிளான்
இதன் மூலம் அடுத்த சீசன் பிக்பாஸ் வரும் வரை ரசிகர்களை எந்தப் பக்கமும் போக விடாமல் இருக்க ப்ளான் பண்ணி இருக்கிறார்கள். அதுபோல இதுவரைக்கும் வந்து சீசன்களில் கலந்துகொண்ட கண்டஸ்டன்டுகள் பலரும் இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். அதிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தியும் ,வனிதாவையும் யாராலயும் மறக்க முடியாது

ஜாஸ்தி சேட்டை
சுரேஷ் சக்கரவர்த்தி தன்னுடைய சேட்டைகளாலும் யாருக்கும் பயப்படாத தில் பேச்சாலும் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தையும் பிடித்து விட்டார் .சிலருடைய வெறுப்பையும் சம்பாதித்து விட்டார். ஆனாலும் தன்னை வெறுப்பவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இந்த வயதிலும் நான் இளைஞர்களுடன் போட்டி போடுவேன் முடிந்த வரை போராடுவேன் என போராட்ட குணத்தை வெளிப்படுத்தியவர். தற்போது இளம் நடிகர்களை பின்னுக்கு தள்ளும் வகையில் குத்தாட்டம் போட்டு கலக்கியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications