ஏங்க சுரேஷு.. இப்படியா பப்பரப்பான்னு படுப்பீங்க.. பொம்பளைப் பிள்ளைக இருக்கிற இடத்துல!
சென்னை: பிக் பாஸ் வீட்டு சோபாவில் மொட்டை சுரேஷ் படுத்துக் கிடந்ததை யாராச்சும் பார்த்தீங்களா.. 3 பொம்பளைங்க சண்டை போட்டிட்டிருக்காங்க. அவர் பாட்டுக்கு காலைத் தூக்கி சோபா மேல வச்சு பப்பரப்பான்னு படுத்துக் கிடக்காரு.
சீரியஸாக இருக்கும் ஒரு சிலர் திடீரென்று செய்யும் செயல்கள் அனைவரையும் ஈர்த்து விடுகிறது. பிக் பாஸ் வீட்டில் சோறு சம்பந்தமாக ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன் காரசாரமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது, மறுபக்கம் மொட்டை சுரேஷ் கலகலப்பாக்கி விட்டார்.
நேற்று வரைக்கும் சண்டை போட்டுக் கொண்டிருந்த சுரேஷ் சக்கரவர்த்தி காலை பப்பரப்பா என்று சோபாவில் போட்டு படுத்துக் கொண்டிருந்தது பார்த்தவர்களை பயங்கரமாக சிரிக்க வைத்து விட்டது.

நடு ஹாலில் பப்பரப்பா
பல படங்களில் நடித்திருந்தாலும் தான் சமையலில் சக்கரவர்த்தி என்று சமையல் பொறுப்பை நான் தான் கவனிப்பேன் என்று அடாவடியாக சமையல்கட்டில் ரகளை இழுத்துக் கொண்டிருந்த சுரேஷ் சக்கரவர்த்தி நடு ஹாலில் செய்திருக்கும் செயல் தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்தப் பதிவை பார்த்து பலரும் இதை தான் கவனித்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் கடுப்பாகி இருக்கிறார்கள்.

இப்படியா படுப்பீங்க
பொம்பளைங்க இருக்கிற இடத்துல இந்த மாதிரியா காலை விரிச்சுப் போட்டு படுத்திருப்பீங்க.. அதுவும் டவுசர் போட்டு தொடை தெரிய படுத்துக் கிடப்பாங்களா யாராச்சும்.. வயசுக்கு தகுந்த மாதிரி நடக்க வேண்டாமா என்று கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். சும்மாவே பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் அரைகுறை உடையுடன் சுற்றிக் கொண்டிருப்பார்கள். தற்போது நைட்டி வரைக்கும் போட்டுக்கொண்டு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

போட்டியோ போட்டி
இந்த வகையில் நாங்களும் சளைத்தவர்கள், என்று நாங்களும் கேஷுவலாக தான் இருப்போம் என்று இந்த மாதிரி எல்லாம் இவர் பண்ணியிருப்பது ரசிகர்களிடம் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீட்டிற்குள் இருப்பவர்கள் நாம் தனியாக இல்லை. நம்மளை ஏகப்பட்ட கேமரா கண்கள் பார்த்துக் கொண்டிருக்கிறது . அதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் இந்த மாதிரி ஆடை யோடும் இந்த மாதிரி செய்கைகளாலும் பலர் முகம் சுளிக்கும் வகையில் இந்த பிக்பாஸ் எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது.

டவுசருடன்தான்
அதிலேயும் வந்த முதல் நாளிலிருந்தே அனைவரை விடவும் வயதில் அதிகமாக இருந்தாலும் நானும் இன்னும் இளமை தான் என்று நிரூபிப்பதற்காக குத்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் சுரேஷ் சக்கரவர்த்தி .அந்த அளவில் நெட்டிசன்கள் கலாய்ப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு செயல்களையும் சுரேஷ் சக்ரவர்த்தி செய்து கொண்டிருக்கிறார் .ஆட்டம் போடும் போது இவரது ஆட்டம் தனித்துவமாக தெரியும் அளவில்தான் இவர் ஆடிக் கொண்டிருக்கிறார்.

ஏதாவது ஒரு சண்டை
சண்டை போட்டு கொண்டிருக்கும் போதும் இவர் கோபப்பட்டு பேசுவதை வைத்து ட்ரோல் பண்ணி நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். 24 மணி நேரமும் இவர்கள் செய்யும் செயலை ரெக்கார்டு பண்ணி இரண்டு மணி நேரம் ஒளிபரப்புவது பிக்பாஸ்க்கு கவலையாக இருக்கிறதோ என்னவோ அந்த இரண்டு மணி நேரத்திற்கும் ப்ரோமோ வைத்து பெரிய அன்னைக்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் கூறிவிடுகிறார்கள். அதிலும் ப்ரோமோவில் இருந்தே நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளவும் ஆரம்பித்துவிடுகிறார்கள்.

தவ நிலை
இப்போ சுரேஷ் சக்கரவர்த்தி சோபாவில் காலை பப்பரப்பா என்று விருத்தி போட்டுக்கொண்டு இருப்பதை பார்த்து விதவிதமாக கலாய்த்து வருகிறார்கள். என்னடா இது கேவலமான போசாக இருக்கிறதே என்று வடிவேலுவை வைத்து மீன்ஸ்களாக போட்டு கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலரோ, பொண்டாட்டியும், அம்மாவும் உக்கிரமாக சண்டை போடும்போது நாம இப்படித்தான் தவ நிலைக்குப் போய் விட வேண்டும் என்று சுரேஷை கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

எலிமினேஷன் லிஸ்ட்
இதற்கிடையே, அடுத்த ப்ரோமோ வில் யாரெல்லாம் இந்த வாரம் எலிமினேஷன் செய்து வீட்டில் இருக்க தகுதி இல்லாதவர்கள் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள் . அதற்கு ஆஜித், ரம்யா, சிவானி , சுரேஷ் சக்ரவர்த்தி என்று கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்டதும் சுரேஷ் சக்ரவர்த்தி வீரமாக நடந்துகொண்டு எல்லாம் கரெக்டா தான் சொல்லி இருக்கிறார்கள் என்று கூறிக் கொண்டே போகிறார்.. என்னவோ போடா மாதவா!
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications