காதலர்களுக்கு ரோல் மாடலான சூர்யா, ஜோதிகா.. ஒரே ஒரு பேட்டியில் நடந்த அதிசயம்! பாராட்டு குவியுதே
சென்னை: சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் திருமணம் ஆகி பல வருஷங்கள் கடந்த பிறகும் ஒருவரை ஒருவர் அதே அன்புடனும், மரியாதை உடனும், அதே பெருமையுடனும் பேசும் தம்பதிகள் மிகவும் குறைவு. அந்த பட்டியலில் ரசிகர்கள் முதலில் சொல்லும் பெயர் சூர்யா -ஜோதிகா தான்.
தற்போது இவர்கள் இருவரும் இணைந்து பிரபல தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கின்றனர். அப்போது அவர்கள் இருவரும் செய்த செயல் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக கவனம் பெற்று வருகிறது. இவர்கள் இருவரும் பேசியதை பலர் பாராட்டி வருகின்றனர். கணவன் மனைவியை எப்படி மதிக்க வேண்டும், மனைவி கணவனை எப்படி பெருமையாக பார்க்க வேண்டும் என்பதை அழகா சொல்லி இருக்காங்களே என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.
சூர்யா ஜோதிகா பேட்டி
பேட்டியில், உங்க 2 பேரில் நடிப்பில் யார் பெஸ்ட் என்ற கேள்வி வந்தபோது முதலில் குறுக்கிட்ட ஜோதிகா, என்னை சூர்யாவுடன் ஒப்பிட வேண்டாம். நடிப்பில் அவர் இருக்கும் இடம் வேறு, அவருடைய நடிப்பு வேற லெவல்.. என்று பாராட்டி இருக்கிறார். அந்த ஒரு பதிலையே கணவனின் திறமையை மனதார பாராட்டும் மனைவியாக ஜோதிகா ரசிகர்களின் கவனம் இருந்திருக்கிறார்.

ஜோதிகா சொன்ன விஷயம்
ஜோதிகா இப்படி சொன்னதும் சூர்யா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு ஹிந்தியில் படம் வந்தால் தமிழில் நடிப்பது போல இயல்பாக எமோஷனலை வெளிப்படுத்துவது சுலபம் இல்லை. ஆனால் ஜோ- க்கு அந்த திறமை இருக்கிறது. எந்த மொழியில் நடித்தாலும் அதே உண்மையான உணர்ச்சியை கொண்டு வருவார். மலையாள படங்களிலும் அதை நிரூபித்து இருக்கிறார் என்று மனைவியைப் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.
ஒருவர் இன்னொருவரை உயர்த்தி பேச, மற்றொருவர் மீண்டும் அவரையே உயர்த்தி பேச அந்த பேட்டி முழுவதும் இதுத்தான் தொடர்ந்து இருக்கிறது. இந்த காட்சிகளைத் தான் நெட்டிசன்கள் சிலாகித்து பாராட்டுகிறார்கள். ஒருவர் பேசும்போது இன்னொருவர் அமைதியாக பார்த்து சிரிப்பதும், கண்களில் தகுந்த மரியாதையும் இடையில் குறிப்பிடாமல் முழுமையாக கேட்பதும் பலருக்கும் பிடித்திருக்கிறது.
ரசிகர்கள் பாராட்டு
இதுதான் உண்மையான பார்ட்னர்ஷிப் என்று 90ஸ் கிட்ஸ்கள் ஹார்டின் பறக்க விடுகிறார்கள். ஏற்கனவே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சூர்யா பேசும் போது, மனைவியை தினமும் காதலிக்க வேண்டும் அவர்களுக்கான முக்கியத்துவத்தை ஒவ்வொரு நாளும் கொடுக்க வேண்டும், உறவுகள் அப்படித்தான் வலுவாகும் என்று சொல்லியிருந்தார். அதைத்தான் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றுகிறேன் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

ஜோதிகாவின் இளமை ரகசியம்
அதுபோல ஜோதிகா கூட ஒரு நிகழ்ச்சியில் சில வருடங்களுக்கு முன்பு பேசும்போது நான் இளமையாக இருக்க காரணம் என்னுடைய ஹஸ்பண்ட் என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறார் என்று ஜாலியாக பேச.. அதுவே பெரியதாக பேசப்பட்டது. அதையெல்லாம் இப்போது மீண்டும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து நடித்த பொது ரசிகர்களுக்கு இந்த ஜோடி ரொம்பவே பிடிக்க தொடங்கிவிட்டது. அதற்குப் பிறகு உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜில்லுனு ஒரு காதல் உட்பட பல படங்களில் நடித்திருந்தனர். அதற்கு பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு தியா தேவ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த ஜோதிகா இப்போ மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதேபோல சூர்யாவிற்கும் சமீபத்தில் வெளியான கருப்பு படம் பெரிய அளவில் கம்பேக் கொடுத்தது. அதை தொடர்ந்து இப்போது விஸ்வநாதன் அண்ட் கோ படத்தில் நடித்திருக்கிறார். அந்த படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
