RETRO: ரெட்ரோ வெற்றி.. சூர்யாவிற்கு விநியோகஸ்தகர் வைரத்தில் கொடுத்த கிப்ட்.. எமோஷனல் தருணம்
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றி பெற்றது. அதற்காக யாரும் எதிர்பார்க்காத பரிசினை அந்த திரைப்படத்தின் விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் சூர்யாவிற்கு வழங்கி இருக்கிறார். ஆனால் அந்த பரிசை சூர்யா வினோஸ்தருக்கே திரும்ப கொடுத்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நடிகர் சூர்யா நடிப்பில் சில வருடங்களாக வெளியாகும் திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அவர் குறித்து விமர்சனங்கள் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. படம் வெளியாகும் முதல் நாளே அந்த திரைப்படங்கள் ட்ரோல் செய்யப்படுகிறது என்று அவருடைய ரசிகர்கள் வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பெரிய அளவில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரெட்ரோ திரைப்படம் வெளியானது.

ரெட்ரோ திரைப்பட வெற்றி
ரெட்ரோ படம் வெளியான முதல் நாளே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படம் கடந்த மே ஒன்றாம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியான ஒரு வாரத்தில் உலகளவில் 104க்கு கோடிகளுக்கு மேலே வசூல் செய்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை ரெட்ரோ திரைப்பட குழுவினர் பிரமாண்டமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
வெற்றி கொண்டாட்டம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44 வது படமாக ரெட்ரோ திரைப்படம் உருவாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெட்டே, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ச், சுஜித் சங்கர், நாசர் என பலரும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களும் ஹிட் ஆகியிருந்தது. காதலும், கோபமும் கலந்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் கார்த்திக் சுப்புராஜ் சூர்யா மற்றும் பட குழுவினர்கள் இணைந்து கடந்த மே 7ஆம் தேதி கேக் வெட்டி கொண்டாடி இருந்தனர்.
சூர்யாவுக்கு கிடைத்த பரிசு
அப்போது பேசிய விநியோஸ்தகர் சக்திவேலன் ரெட்ரோ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட வாய்ப்பு அளித்த 2டி நிறுவனத்திற்கும் சூரிய அண்ணன் மற்றும் ராஜசேகர பாண்டியண் அண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் இந்த திரைப்படம் இந்த வருடத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக லாபம் தந்த திரைப்படமாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

பரிசை திரும்ப கொடுத்த சூர்யா
இந்த திரைப்படம் உருவாக காரணமான தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய கலைஞர்களான இயக்குனர், இசையமைப்பாளர், ஒலிப்பதிவாளர், நடிகர்கள் போன்றவர்களுக்கு வைரம் மோதிரங்களை பரிசாக வழங்கினோம். சூர்யா அண்ணனுக்கு மோதிரம் வழங்கிய போது அதனை உடனடியாக எனக்கே திரும்ப அறிவித்து தன் அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டார். அது என் வாழ்க்கையில் மற்றொரு நிகழ்வான தருணமாக மாறியது.
முதல் முறை இல்லை
இந்த நிகழ்ச்சி எனக்கு முதல் முறை நடக்கவில்லை. இதற்கு முன்பு கடைக்குட்டி சிங்கம் வெற்றி விழாவில் தங்கச் செயின் மற்றும் விருமன் வெற்றி விழாவில் வைர ப்ரேஸ்லெட் பரிசாக வழங்கும் போதும் சூரியா அண்ணா எனக்கே அதை திரும்ப அணிவித்து விட்டார் என்று பேசி இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications