சூர்யாவின் 50 வது பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜோதிகா! வதந்திகளுக்கு பதிலடி! போட்டோவில் கவனிச்சீங்களா?
சென்னை: நடிகர் சூர்யா தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரை துறையினர், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சூர்யாவின் மனைவியான ஜோதிகா தன்னுடைய கணவரின் பிறந்தநாள் புகைப்படங்களை நள்ளிரவில் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். சூர்யாவின் தந்தையான சிவகுமார் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது தன்னிடம் அனுமதி இல்லாமல் புகைப்படங்கள் எடுத்த ரசிகர்களின் செல்போனை உடைத்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அதுபோல கடவுள் மற்றும் படிப்பு பற்றி ஜோதிகா பேசியதும் பலராலும் இப்போதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சிலர் ட்ரோல் செய்து கொண்டிருக்கின்றனர் அதனாலேயே சூர்யாவின் திரைப்படங்கள் வெளியாகும் போது அதிகமான நெகட்டிவ் கமெண்ட்களும் வந்து கொண்டிருக்கிறது.

சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிகளாக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தாலும் இவர்கள் இருவரும் பிரிய போவதாக மாதத்திற்கு ஒருமுறை செய்திகள் வைரலாகி வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜோதிகா தன்னுடைய கணவரின் பிறந்தநாளை சந்தோசமாக கொண்டாடி புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
கருப்பு திரைப்படம்
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள திரைப்படங்களின் புதிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சூர்யா தற்போது நடித்து வரும் 'கருப்பு' திரைப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் சூர்யா கம்பீரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார்.
சூர்யாவுக்கு ஜோடி
திரிஷா இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்துள்ளார். 'கருப்பு' திரைப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தீபாவளிக்கு வரும் திரைப்படம்
படப்பிடிப்பு முடிந்து இப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இறுதிக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் சமீபத்திய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால், இப்படத்தின் மூலம் ஒரு பெரிய வெற்றியை கொடுக்க அவர் காத்துக்கொண்டிருக்கிறார்.
சூர்யாவின் 46வது திரைப்படம்
'கருப்பு' திரைப்படத்தைத் தொடர்ந்து சூர்யா தனது 46-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். சித்தாரா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார்.
சூர்யாவின் அடுத்த திரைப்படங்கள்
லோகேஷ் கனகராஜின் 'ரோலெக்ஸ்', 'விக்ரம் 2' போன்ற திரைப்படங்களிலும் சூர்யா நடிக்கவுள்ளார். இதனால் அடுத்த ஆண்டு சூர்யா ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து காத்துக்கொண்டிருக்கிறது. சிறந்த மகனாக, சகோதரனாக, கணவனாக குடும்ப வாழ்க்கையில் வாழ்ந்து வரும் சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்.

நடிகர் சூர்யா சொத்து மதிப்பு
நடிகர் சூர்யா தனது 50-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவர் சுமார் 350 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவர் என்று கூறப்படுகிறது. அவருக்கு சென்னையில் ஒரு பெரிய பங்களா உள்ளது. மும்பையில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். விரைவில் சென்னையில் ஒரு பிரம்மாண்ட வீடு கட்டவும் திட்டமிட்டுள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications