சூரியவம்சம் குட்டி சக்திவேல் ஞாபகம் இருக்கா? திடீரென வெளியிட்ட புகைப்படம்.. இப்போ எப்படி இருக்காங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சரத்குமார் நடிப்பில் 90களில் பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒரு திரைப்படம் தான் சூரிய வம்சம். இந்த திரைப்படம் காதல் திருமணம் செய்த பலருக்கும் மோட்டிவேஷனாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் குட்டி சக்திவேல் கேரக்டரில் நடித்த நடிகை ஹேமலதா ரசிகர்களின் மனதில் அதிகமான இடத்தை பிடித்திருந்தார்.

இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து ஹேமலதா தான் சூரியவம்சம் திரைப்படத்தில் நடிக்கும் போது எடுத்த புகைப்படத்தையும் இப்போது உள்ள புகைப்படத்தையும் கம்பர் செய்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Suriyavamsam Movie Kutty Shakthivel Actress Hemalatha dauther photo

அந்த வகையில் சூரிய வம்சம் திரைப்படம் 90ஸ்களின் ஃபேவரைட் திரைப்படங்களில் ஒன்று. இப்போதும் இந்த திரைப்படம் சன் டிவி, கே டிவிகளில் ஒளிபரப்பாகும் போது எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போன்று ஆர்வத்தோடு பார்ப்பவர்கள் ஏராளம்.

அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது. அதுவும் அந்த திரைப்படத்தில் அமைந்த பல வசனங்களும் யாராலையும் மறக்க முடியாது. அதிலும் பாயாசம் சாப்பிடுங்க ஃபிரண்ட்ஸ், மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?, வேணும்னு யாராவது பண்ணுவாங்களா பிரண்ட்ஸ், நம்ம சின்ராசா கையிலேயே பிடிக்க முடியாது, அப்பாதான் முக்கியம்னு சொன்ன சின்ராசு எங்க..., என்று பல மீம்ஸ் டெம்ப்ளேட்டுகள் இணையத்தில் வலம் வருவதை பார்க்க முடிகிறது.

அந்த அளவிற்கு இந்த திரைப்படம் மக்களின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் சக்திவேல் மற்றும் சின்ராசு என்ற இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதுபோல தேவயானி, ராதிகா சரத்குமார், மணிவண்ணன், ஆனந்தராஜ், ஆர் சுந்தர்ராஜன், ப்ரியா ராமன் என பலர் இந்த திரைப்படங்களில் நடித்து இருந்தனர்.

இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்துள்ளது. அதேபோல இந்த திரைப்படத்தில் சின்ராசுவின் மகனாக ஜூனியர் சக்திவேலாக நடித்த நடிகையின் பெயர் ஹேமலதா. இவரை பார்த்து பலரும் இந்த திரைப்படத்தில் நடித்தது ஆண் குழந்தை என்று நினைத்து இருக்கிறார்கள். ஆனால் அதில் நடித்தது நிஜத்தில் ஒரு பெண் குழந்தை தான்.

Suriyavamsam Movie Kutty Shakthivel Actress Hemalatha dauther photo

அதுபோல அந்த திரைப்படத்தில் நடித்த ஹேமலதா சூரியவம்சம் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூமகள் ஊர்வலம், சேது, காதல் கொண்டேன் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். அதுபோல சின்னத்திரையிலும் சித்தி, கனா காணும் காலங்கள், தென்றல் போன்ற பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளாக ஹேமா இந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்த நிலையில் இவரை பலரும் தேடிக் கொண்டிருந்தனர். இப்படியான நிலையில் தான் இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக தன்னுடைய குடும்ப புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

Suriyavamsam Movie Kutty Shakthivel Actress Hemalatha dauther photo

அதிலும் தன்னுடைய இரண்டு மகள்களோடு இவர் செய்யும் க்யூட்டான ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த ரிலீஸ்களை பார்க்கும் ரசிகர்களில் அதிகமானோர் கமாண்ட் செய்வது சூரியவம்சம் குட்டி சக்திவேலுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகள் இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுபோல சூரியவம்சம் திரைப்படத்தில் குட்டி சக்திவேலின் கியூட்டான ரியாக்சன் ரசிகர்களை கவர்ந்திருக்கும்.

அதுவும் அந்த யானை மேலே சவாரி போகும் காட்சிகளில் பார்க்கும் ரசிகர்களையும் அடடா என்று சொல்ல வைத்திருப்பார். அதுபோல பெரிய சக்திவேல் மை தெளிக்கும் போது தெரியாமல் குட்டி சக்திவேல் சட்டையில் அந்த மை பட்டதால் இதையா வேணும்னு யாராவது பண்ணுவாங்களா பிரண்ட்ஸ்... என்று இவர் அழகாக பேசியிருப்பார்.

Suriyavamsam Movie Kutty Shakthivel Actress Hemalatha dauther photo

சூரியவம்சம் திரைப்படத்தில் இந்த குட்டி சக்திவேல் "சொல்லுங்க பிரெண்ட்" என்று சொன்னது தான் இப்போது youtube சேனலில் பலரும் "ஹாய் பரண்ட்ஸ்" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் போல...!? அதனால் youtube சேனல்களில் பலர் தங்களுடைய திறமையை காட்டுவதற்கு அடித்தளம் போட்டது இந்த குட்டி சக்திவேல் தான். அதுபோல குட்டி சக்திவேலின் நடிப்பில் உங்களுக்கு எந்த காட்சிகள் பிடிக்கும் என்பதை சொல்லிட்டு போங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+