சர்வைவர் நிகழ்ச்சியில் நடந்தது எல்லாம் பொய்யா??..போட்டோவை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்
சென்னை: சர்வைவர் போட்டியாளர்களின் போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ரசிகர்கள் ஒரு பக்கமாக ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் போது இங்கே வேற மாதிரி நடந்து வருகிறது என்று பலர் புலம்பி வருகிறார்கள்.
நிகழ்ச்சி முடிந்து போட்டியாளர்கள் செய்த செயல் தான் தற்போது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

ஜீ தமிழ் ரியாலிட்டி ஷோ
ஜீ தமிழில் முதல்முறையாக ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பப்பட்டது. இதுவரைக்கும் இல்லாத வகையில் பிரம்மாண்டமாகவும் அனைவரும் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருந்தனர். சர்வைவர் நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார் இந்த செய்தி ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இதைப் பற்றி பரவலாக ரசிகர்களின் மத்தியில் எப்படி இருக்குமோ என்ற ஒரு கோணத்தில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலே பார்ப்பவர்களுக்கு அல்லு விடும் வகையில் டாஸ்க்குகள் அமைந்திருந்தது.

ரசிகர்களின் கோபம்
தண்ணி அதிகமாக சூழ்ந்த கடல் பகுதியில் டாஸ்க் தொடங்கியதால் போட்டியாளர்கள் அனைவரும் வெறித்தனமாக தங்களது திறமையை நிரூபித்து வந்தனர். இரண்டு அணியாக போட்டியாளர்கள் பிரிந்து இருந்தாலும் அதில் ரசிகர்களின் மனதை காடர்கள் அணி அதிகமாகவே கவர்ந்துவிட்டது. தற்போது காடர்கள் அணியிலிருந்து விஜி தான் சர்வைவர் டைட்டிலை வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் பலர் இந்த பட்டம் உமாபதி க்கு வர வேண்டியது என்று கூறிக் கொண்டிருந்தனர்.

கடைசிநேர ட்விஸ்ட்
ஆரம்பத்தில் அன்பாகவும் ஒற்றுமையாக இருந்த காடர்கள் அணியில் கடைசி ஒரு சில எபிசோடுகளில் சண்டை சச்சரவுகள் தொடங்கி ஆளாளுக்கு ஒன்றை பேசி பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து வந்தது. பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு என்ன இவர்கள் இப்படி மாறிவிட்டார்கள், இதில் யார் சரி என்று யோசிக்கின்ற மாதிரி தான் பல செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் கடைசி நாளில் விஜியின் திடீர் மனமாற்றம் ரசிகர்களை அதிகமாக குழப்பமடைய செய்துவிட்டது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் விஜியின் மீது சக போட்டியாளர்கள் கோபத்தில் இருப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
Recommended Video

சூப்பர் மீட்டிங்
வழக்கமாக ரியாலிட்டி ஷோக்களில் நடப்பது போலத்தான் இங்கேயும் நடைபெற்று இருந்தாலும் சர்வைவர் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு தற்போது காடர்கள் அணியினர் அனைவரும் ஒன்றாக சந்தித்துள்ளனர். அவர்கள் அந்த அழகிய தருணத்தை போட்டோக்களாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கின்றனர். இதில் விஜி, விக்ராந்த், இனிகோ, உமாபதி, ஸ்ருஷ்டி டாங்கே, லேடி கேஷ் என பலர் உள்ளனர். அதில் வெனசாவை காணவில்லையே என்று ரசிகர்கள் பீல் பண்ணியும் வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications