ஸ்வாகதா-க்கு இசையமைப்பாளரால் பிரச்சனை நடந்தது உண்மைதான்.. ஆனால், இதை ஏன் செய்யல! பிரபலம் குழப்பமான கேள்வி
சென்னை: தமிழகத்தில் தற்போது எலக்சன் ஃபீவர் ஒரு பக்கம் இருக்க, அதையும் மீறி பாடகி ஸ்வாகதா பற்றிய பேச்சு தான் சோசியல் மீடியாவில் அதிகமாக இருந்து வருகிறது. அவர் பிரபல இசையமைப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லி இருந்தது பெரிதாக பேசப்பட்டு வருகிறது. 7 வருடத்திற்கு முன்பு நடந்த விஷயத்தை இப்போது அவர் வெளிப்படையாக பேசி இருக்கிறார். இதகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஸ்வாகதா மீதே குற்றம் என்பது போல பேசி இருப்பது சோசியல் மீடியாவில் விவாதங்களை சந்தித்து வருகிறது.

பாடகி ஸ்வாகதா ஆரம்ப காலம்
மதுரையில் பிறந்து வளர்ந்த ஸ்வாகதா, சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று, பின்னர் தமிழ் சினிமாவில் தனது குரலால் தனி இடத்தை பிடித்தவர். 200-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், காற்றின் மொழி, நோட்டா போன்ற படங்களில் பாடல்கள் பாடியதுடன், பல மேடை நிகழ்ச்சிகளிலும் தனது குரலை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வளவு சாதனைகள் இருந்தபோதிலும், தனது வாழ்க்கையில் நடந்ததாக கூறப்படும் ஒரு கடுமையான அனுபவத்தை சமீபத்தில் வெளிப்படுத்தியிருப்பது தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
ஸ்வாகதாவின் குற்றச்சாட்டு
சமீபத்தில் ஒரு யூடியூப் பேட்டியில் பேசிய ஸ்வாகதா, ஒரு இசையமைப்பாளர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது, சம்பளம் சரியாக வழங்கப்படாததுடன், அந்த நபர் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், மேலும் அந்த சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு வெளிவந்ததும், இசைத்துறையிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யார் அந்த இசை அமைப்பாளர் என்று கேள்வி பலருக்கும் இருக்கிறது. இதற்கு சிலர் ஸ்வாகதாவிற்க்கு ஆதரவாகவும், சிலர் சந்தேகத்துடனும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரிஷிகேஷில் புதிய வாழ்க்கை
இந்த அனுபவத்திற்குப் பிறகு, சினிமாவிலிருந்து விலகி, ரிஷிகேஷ் பகுதியில் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளதாக ஸ்வாகதா கூறியுள்ளார்.
ஆனால், நடந்ததை மறந்து விட முடியாது என்றும், சட்டப்படி போராடுவேன் என்ற உறுதியையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த பேச்சு, அவர் தனது வழக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்போகிறார் என்ற சிக்னலாக பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர் பாலாஜி பிரபு விமர்சனம்
இந்நிலையில், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அளித்த பேட்டி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது, இந்த சம்பவம் நடந்தது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு என்றால், அதே நேரத்தில் ஏன் வெளிப்படுத்தவில்லை என்ற கேள்வி எழுப்பினார். குடும்பத்தில் ஆதரவு இருந்தபோதும், அல்லது போலீசில் புகார் அளிக்க வாய்ப்பு இருந்தபோதும் அது செய்யப்படவில்லை என்பதே ஆச்சரியமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், அந்த நேரத்தில் புகார் அளித்திருந்தால் விசாரணை நடைபெற்று, ஆதாரங்களும் கிடைத்திருக்கும்; குற்றம் செய்தவர் தண்டனை அனுபவித்திருப்பார் என்றும் அவர் கூறினார். அதோடு ஸ்வாகதா லேசு பட்டவர் கிடையாது. அவங்க வீட்டில் நான்கு பெண்கள் இருக்கிறார்கள். அதிலும் பிக் பாஸ் மாயா தான் இவருடைய தங்கச்சி. மாயா என்றாலே எல்லோருக்கும் தெரியும் அவர் ரொம்ப தைரியமான பொண்ணு என்று, அப்படிப்பட்ட ஒரு தைரியமான பொண்ணு இருக்கும் வீட்டில் இவர் உண்மையை வெளியே கொண்டு வராமல் விட்டதுதான் ஆச்சரியமாக இருக்கிறது என்றும் பேசி இருக்கிறார்.
இப்போது அவர் பேசுவது சரிதான், ஸ்வாகதாவிற்க்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மையாக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் அவரைப் பற்றி பேசி இருந்தால் மற்ற பெண்கள் பாதிக்கப்படாமல் இருந்திருப்பார்கள் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு மற்றும் விவாதம்
பாலாஜி பிரபுவின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தையும் எதிர்ப்பையும் சந்தித்து வருகின்றன. "ஒரு பெண் உடனே பேச முடியாத சூழ்நிலைகளும் இருக்கும்", "பயம், மனஅழுத்தம் காரணமாக தாமதமாக பேசுவது தவறு இல்லை" என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மற்றொரு பக்கம், "அந்த நேரத்தில் நடவடிக்கை எடுத்திருக்கலாம்" என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications