Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளமை புதுமை ஸ்வர்ணமால்யாவை ஞாபகம் இருக்கிறதா? ஷாப்பிங் போன இடத்தில் இப்படி ஒரு அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஸ்வர்ணமால்யா தற்போது தன்னுடைய ஷாப்பிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தொகுப்பாளராகவும் நடிகையாகவும் இருந்து வரும் ஸ்வர்ணமால்யா பல வருடங்களுக்குப் பிறகு சமூக வலைத்தளத்தில் முகத்தை பிரதிபலிப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்

கலாக்ஷே்த்ராவிற்கு ஷாப்பிங் போன சொர்ணமால்யா பல பொருள்களைப் பற்றி விரிவாக எடுத்து கூறி இருக்கிறார்.

Swarnamalya went shopping at Chennai Kalakshetra and interacted with fans

90ஸ் ஹிட்ஸ் களால் இப்ப வரைக்கும் மறக்க முடியாத பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்வரணமால்யாவை பலருக்கும் நினைவில் இருக்கும். அவர் புலிவால் திரைப்படத்திற்குப் பிறகு டிவியில் காணாமல் இருந்தார்.இந்த நிலையில் இவர் என்ன ஆனார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையிலேயே நான் எங்கேயும் போகவில்லை இங்கேதான் இருக்கிறேன் என்று தன்னுடைய வீடியோவை youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

Swarnamalya went shopping at Chennai Kalakshetra and interacted with fans
இளமை புதுமை ஸ்ர்ணமால்யாவை

அதில் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் கலாக்ஷே்த்ராவிற்க்குள் எஸ்பிஷன் பார்க்க போயிருக்கிறார். அங்கே பல கலைப் பொருள்கள் மற்றும் பாரம்பரிய பொருட்களை பற்றி தன்னுடைய ரசிகர்களுக்கு விரிவாக விளக்கம் கொடுத்தபடியே, அங்கே வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் youtube சேனலுக்காக வீடியோ எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்த ரசிகர்கள் பலர் தாங்களும் உங்களை வீடியோ எடுக்கிறோம் என்று சொல்லி இவரை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

Swarnamalya went shopping at Chennai Kalakshetra and interacted with fans

பல வருடங்களாகவே கேமரா முன்னாடி வலம் வந்த இவருக்கு கேமரா என்றால் பயமா? அங்கு இருப்பவர்கள் பயந்து போகும் அளவிற்கு அவர்களை பிடித்து தன்னுடைய கேமரா முன்னாடி நிற்க வைத்து அவர்களையும் வழக்கம் போல ஒரு தொகுப்பாளராக மாறி பேட்டி எடுத்தபடியே வலம் வருகிறார். அது மட்டும் அல்லாமல் வீட்டிற்கு தேவையான அலங்கார பொருள்கள் பலவற்றையும் விரிவாக ரசிகர்களுக்கு புரியும் வகையில் சொல்லிக் கொண்டு அங்கிருக்கும் நபர்களிடம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பழமொழிகளிலும் பேசிக் கொண்டிருக்கிறார்.

ஸ்வர்ணமால்யாவை பலருக்கும் சன் டிவியில் ஒளிபரப்பான இளமை புதுமை நிகழ்ச்சியின் மூலமாகவே தெரிந்திருக்கும். இந்த நிகழ்ச்சியில் இவர் தொகுத்து வழங்கும் அழகை பார்ப்பதற்காக பல 90ஸ் கிட்ஸ்கள் டிவி முன்பே தவம் கிடந்த காலம் உண்டு. அதற்கு பிறகு கலக்கப்போவது யாரு பகுதி 2, குடும்ப திரை, நிம்மதி உங்கள் சாய்ஸ், அன்புள்ள சினேகிதி என சின்னத்திறையில் சன் டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி, ஜீ தமிழ் என பல டிவி சேனல்களில் மாறி மாறி புது புது நிகழ்ச்சிகளை இவர் கலந்து கொண்டிருந்தார்.

சின்னதிரையில் மட்டுமல்லாமல் வெள்ளிதிறையிலும் இவர் ஒரு ரவுண்டு கலக்கி விட்டார். அதுவும் முதல் திரைப்படமான அலைபாயுதே திரைப்படம் யாராலும் மறக்க முடியாது. அந்த திரைப்படத்தில் ஒட்டுமொத்த நடிப்பையும் காட்டி காதலை கொண்டாட வைத்தது ஷாலினி மற்றும் மாதவனாக இருந்தாலும், அனைவருடைய அனுதாபத்தையும் அள்ளியது பூரணி கேரக்டரில் நடித்த ஸ்ர்ணமாலியா தான், ஸ்வர்ணமாலியாவும், ஷாலினியும் அந்த திரைப்படத்தில் அக்கா தங்கச்சியாக இருந்தாலும் நெருங்கிய நண்பர்களாக தான் இருந்து வருவார்கள்.

அக்காவிடம் சொல்லாமல் ஷாலினி அக்காவிற்கு திருமணத்திற்கு முன்பே ரகசிய திருமணம் செய்து கொண்டது, அதற்குப் பிறகு வீட்டை விட்டு வெளியேறியது போன்ற சூழ்நிலைகளில் ஸ்வர்ணமால்யாவின் நடிப்பு வேற லெவல் என்று பலருடைய பாராட்டை முதல் படத்திலேயே பெற்றிருந்தார். அதைத்தொடர்ந்து எங்க அண்ணா திரைப்படமும் அதற்குப் பிறகு மொழி என்ற திரைப்படமும் வந்தது. அதுவும் மொழி திரைப்படத்தில் இவருடைய நடிப்பு மீண்டும் ஒரு வெற்றி முத்திரைதான்.

மொழி திரைப்படத்தில் ஜோதிகாவின் தோழியாக ஏஞ்சலின் ஷீலா எனும் கேரக்டரில் தன்னுடைய நடிப்பை தத்ரூபமாக வெளிகாட்டி இருப்பார். அதுவும் வாய் பேச முடியாதவர்களின் சைகைகளை பார்த்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறும் ஒரு கேரக்டராக இந்த திரைப்படத்தில் அவர் நடித்திருப்பார். திரைப்படங்களில் வேற லெவலில் கலக்குவார் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு இவர் புலிவால் என்ற திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருப்பது வருத்தம் தான்.

மொழி திரைப்படத்தில் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது பரிந்துரைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது ஸ்வர்ணமாலியா வெளியிட்ட வீடியோ அதிகமான லைக் மற்றும் கருத்துக்களை பெற்று வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு இவரை பார்த்த இவருடைய ரசிகர்கள் இன்னமும் அப்படியே இருக்கிறாரே என்று வியந்து போய் கருத்துக்களை கொட்டுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+