Kanmani Serial:மாலைக்குள்ளே தாலியா...? ஒர்கவுட் ஆகலையே
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் கண்ணனுடன் சவுந்தர்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போவுது. இருவரும் ஜோடியாக உட்கார்ந்து இருக்க, உறவுக்காரர்கள் நலுங்கு வைக்கிறார்கள்.
சவுந்தர்யா ஆகாஷை விரும்புவதால், கண்ணனுடன் நடக்கும் இந்த கல்யாணம் பிடிக்கலை என்றாலும், பேசாமல் உட்கார்ந்து இருக்கா, கிருஷ்ணவேணி அத்தையின் அக்கா மகன் வேல்முருகன் நலுங்கு வைக்க வருகிறானாம். அப்போது கையில் வைத்து இருக்கும் மாலைக்குள் ஒரு தாலியை ஒளித்து வைத்து இருக்கிறான்.
இந்த ஐடியாவை சவுந்தர்யாவின் அத்தைகள், மாமன்கள் சேர்ந்து செய்து, மாலைக்குள் தாலி வைத்து சவுந்தர்யாவுக்கு போட்டுவிட்டால் சவுந்தர்யா வேல்முருகனுக்குத்தான் என்பது இவர்கள் நினைவு.

சீரியலும் சினிமாதான்
சீரியலும் இன்னொரு சினிமா போலத்தானே...அதனால, ஒரு முறை கழுத்தில் தாலி ஏறிவிட்டால், அம்மன் கோயில் கிழக்காலே படம் மாதிரி தாலியை கழட்ட மாட்டாங்க. அப்புறம் சவுந்தர்யா வேல் முருகனுக்குத்தான்னு முடிவு செய்துக்கறாங்க. வேல்முருகனின் சித்தி, வேல்முருகா நீ போயி சவுந்தர்யாவுக்கு நலுங்கு வைன்னு சொல்லி அனுப்பி வைக்கறாங்க.

ஆசை ஆசையாய் இருக்கிறதே
ஆசை ஆசையாய் இருக்கிறதே என்று பாடல் பாடாத குறையாக வேல்முருகன் தாலி பதுக்கி இருக்கும் மாலையை சவுந்தர்யாவின் கழுத்தில் போட்டுவிட்டு, அத்தை, மாமா என்னை ஆசிர்வாதம்செய்ங்க என்று சவுந்தர்யா அம்மா அப்பாவின் காலில் விழுகிறான்.எதுக்குப்பா நீ காலில் விழறே என்று இவர்கள் இருவரும் கேட்கிறார்கள்.

வில்லன் டயலாக்
அப்போதுதான் வேல்முருகன் வில்லன் டயலாக் பேசறான்...இது வெறும் மாலைன்னு நினைச்சீங்களா? இதில் தாலி சேர்த்து போட்டு இருக்கேன். அதாவது சவுந்தர்யா கழுத்தில் நாந்தான் தாலி கட்டி இருக்கேன். இனி நாங்க புருஷன் பொண்டாட்டி. அதனாலதான் ஆசீர்வாதம் பண்ணுங்கன்னு கேட்டேன்னு சொல்றான்.

அடேய் தாலி இல்லைடா
அதற்குள் மாலைக்குள் தாலி இல்லை என்று அங்கு இருந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்து போக, சதிகாரர்கள் அடேய்.. மாலைக்குள் தாலி இல்லைடா.. பெர்ஃபார்மன்ஸை நிறுத்திக்கோடா என்று கத்தவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் நிக்கறாங்க. ஆமா. இதுக்குள்ள இருந்த தாலி எங்கே போச்சு...பாருங்க தெரியும்...!
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications