நடிகர் பிரபுவுக்கு மூளையில் நடந்த அறுவை சிகிச்சை.. தற்போது நிலை என்ன? வெளியான பரபரப்பு தகவல்
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபுவிற்கு மூளையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்த நிலையில் தற்போது அவர் டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார்.
நடிகர் பிரபு 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க தொடங்கி இப்ப வரைக்கும் முன்னணி நடிகராக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளதாக Zoom வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் கூறியுள்ளதாவது நடிகர் பிரபு கணேசன் தலைவலி காய்ச்சல் மற்றும் தலைவலி அறிகுறி உடன் மெட்வே ஹார்ட் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நடு மூளை தமனியில் பிளவு பகுதியில் உள்ள கரோட்டின் தமனியின் மேல் பகுதியில் வீக்கம் அல்லது பலூன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் இருந்து பிரபு இப்போது நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் ,மூளை அனீரிசிம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிரபு தொடர்ந்து ஓய்வில் இருந்து வருவதாகவும் அவருடைய குடும்பத்தினர் அவரை கவனித்து வருகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள நிலையில் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அவருக்காக பலர் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
நடிகர் சிவாஜி கணேசனின் மகனாக இருந்தாலும் எந்த இடத்திலும் தன்னுடைய தந்தையின் சாயலை பின்பற்றாமல் தனி ஸ்டைலில் சினிமாவில் கலக்கி வருகிறார். தற்போது அவருக்கு 68 வயதாகிறது. ஆரம்பத்தில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்ததும் நடிகராக அறிமுகமாக வேண்டும் என்று பிரபு முயற்சி செய்திருக்கிறார். அப்போது சிவாஜி கணேசனுக்கு அதில் விருப்பமே இல்லையாம்.
ஆனாலும் மகன் ரொம்ப ஆசைப்படுகிறார் என்பதற்காகத்தான் சினிமாவில் நடிக்க சம்மதம் கொடுத்திருக்கிறார். அப்போது 1982 ஆம் ஆண்டு வெளியான சங்கிலி என்ற படத்தின் மூலமாகத்தான் பிரபு சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய வித்தியாசமான கேரக்டரை தேர்வு செய்து நடிக்க தொடங்கியதால் இவர் ஐந்து வருடத்தில் சுமார் ஆறு படங்களில் நடித்திருக்கிறார்.
அதிலும் அதிசய பிறவி, சின்னஞ் சிறுசுகள், கோழி கூவுது போன்ற படங்கள் இவரை பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது. 1993 ஆம் ஆண்டில் சுமார் பத்து படங்களுக்கு மேலாக ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் படு பயங்கர பிசியான ஹீரோவாக வளர்ந்த பிரபு தான் மட்டும் கதாநாயகனாக நடிக்காமல் தன்னோடு வளர்ந்து வரும் கதாநாயகர்களோடும் சேர்ந்து நடித்து வந்தார். இது இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.
கதாநாயகனாக மட்டுமல்லாமல் இப்போது உள்ள இளம் கதாநாயகர்களுக்கும் அப்பா, அண்ணன், மாமா போன்ற வலுவான வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் கலகலப்பான நடிகராக இருக்கும் பிரபுவிற்கு இப்போது உடல்நல பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவருடைய ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications