இளைஞர் கொடுத்த புகார்.. தமிழ் பிக் பாஸ் பிரபலம் கைது.. கிண்டியில் நடந்த சம்பவம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடம் அறிமுகமான நடிகை வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்டிருப்பது சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. குறும்படம் தயாரிப்பதற்காக கூறி ஒருவரிடம் 5 லட்சம் பெற்றதாகவும், பின்னர் பணத்தை திருப்பி கேட்ட போது அவரை மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் வர்ஷினி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போலீசரின் தகவலின்படி, வர்ஷினி ஒரு நபரிடம் குறும்படம் தயாரிக்கப் போவதாக கூறியிருக்கிறார். அந்த நபரும் அவரை நம்பி 5 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பிறகு குறும்படம் தொடர்பான விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்துதான் கொடுத்த பணத்தை திருப்பி தருபடி அந்த நபர் கேட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் பிரச்சனை அடுத்த கட்டத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

பணத்தை திருப்பி தருவது தொடர்பாக அந்த நபருக்கும், வர்ஷினிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். பின்னர் கிண்டி பகுதியில் அந்த நபரிடம் மிரட்டல் விடுவிக்கப்பட்டதாகவும் அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் புகார் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாகவே போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
யார் இந்த வர்ஷினி வெங்கட்
சென்னையைச் சேர்ந்த வர்ஷினி வெங்கட் மாடல், நடிகை மற்றும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். Mass Communication படித்த அவர், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் தொலைக்காட்சி மற்றும் விளம்பரத் துறையிலும் பணியாற்றியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான 'கண்ணான கண்ணே' சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன்பிறகு பிக்பாஸ் வாய்ப்பு அவருக்கு பெரிய அளவில் கவனத்தை பெற்றுக் கொடுத்தது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வர்ஷினி வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்றார்.
அவர் மட்டும் இல்லாமல் ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார், ரயான் உள்ளிட்டோரும் வைல்டு கார்டு மூலம் அந்த நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். ஆனால் வர்ஷினியின் பிக்பாஸ் பயணம் நீண்ட நாட்கள் செல்லவில்லை. சுமார் 3 வாரங்களிலேயே அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். வெளியேறும் நேரத்திலும் அவர் சிரித்தபடியே பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றது அப்போது பேசுபொருளாக இருந்தது.
சினிமாவிலும் கவனம்
பிக்பாஸுக்கு பிறகு வர்ஷினி சினிமாவிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். 'சொட்ட சொட்ட நனையுது' திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் ரீல்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட கதாபாத்திரமாக அவர் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
அதனால் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த கைது செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை, அவை குற்றச்சாட்டுகளாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். போலீஸ் விசாரணை மற்றும் அடுத்தகட்ட நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகே இந்த வழக்கின் முழு பின்னணி தெளிவாகும்.




Click it and Unblock the Notifications
