2024ல் மறைந்த தமிழ் சினிமா பிரபலங்கள் இத்தனை பேரா..? பலரை வருத்தத்தில் ஆழ்த்திய பிரபலங்கள்
சென்னை: 2024 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டும்தான் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த வருடத்தில் மறைந்த தமிழ் சினிமா மற்றும் சீரியல் பிரபலங்கள் பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். ஆனால் நம்முடைய உறவினர்களோ அல்லது நண்பர்களோ, தங்கள் பார்த்து வியந்தவர்களோ இந்த உலகை விட்டு மறைந்து விட்டார்கள் என்ற செய்தியை கேள்விப்படும் போது எல்லோருக்கும் ஒரு வருத்தம் உருவாகி விடுகிறது.

இந்த வருடத்தில் பல சந்தோஷமான நினைவுகள் இருந்தாலும் சில துக்கமான விஷயங்களும் நடந்து இருக்கிறது. அந்த வகையில் பலருக்கும் பரிச்சயம் ஆன ஒரு சில கலைஞர்களின் மரணம் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்த வருடத்தில் உயிரிழந்த தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றி இதில் பார்க்கலாம்.
நடிகர் சேஷு: விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த சேஷு பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, குளுகுளு போன்ற பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். கடைசியாக நடிகர் சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்திலும் நடித்திருந்தார். சேஷு உடல்நிலை குறைவு காரணமாக கடந்த மார்ச் 26 ஆம் தேதி காலமானார்.

நடிகர் செவ்வாழை ராசு: இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தில் பிணம்திண்ணி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமான செவ்வாழை ராசு அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தார். அவர் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அன்று உடல்நிலை குறைவால் சிகிச்சை பலனின்றி 70 வயதில் காலமானார்.

நடிகர் பிஜிலி ரமேஷ்: youtube சேனல் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்து சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்த பிஜிலி ரமேஷ் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அவர் உடல்நிலை குறைவால் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி காலமானார்.

நடிகர் டெல்லி கணேஷ்: திரைப்படங்களில் பல வருடங்களாக நடித்து வந்த நடிகர் டெல்லி கணேஷ் சீரியல்களிலும் நடித்திருந்தார். அவர் 80 வயதில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி காலமானார்.

நடிகர் நேத்ரன்: 25 வருடங்களுக்கு மேலாக சினிமா மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் நேத்ரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி, பாக்கியலட்சுமி சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தன்னுடைய 47 வது வயதில் காலமானார்.

நடிகர் விஸ்வேஸ்வர ராவ்: பல படங்களில் துணை நடிகராகவும், காமெடி கேரக்டரிலும் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் விஸ்வேஸ்வர ராவ் உடல்நிலை குறைவால் கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி காலமானார். இவர்கிட்ட 350 படங்களில் நடித்திருக்கிறார். அதில் 150 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

நடிகர் டேனியல் பாலாஜி: வேட்டையாடு விளையாடு, காக்க காக்க, பைரவா போன்ற பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 30ஆம் தேதி காலமானார்.

நடிகர் பிரதீப் கே. விஜயன்: தெகிடி, டெடி, லிப்ட் போன்ற பல படங்களில் நடித்த நடிகர் பிரதீப் விஜயன் இதுவரை நடித்த படங்களில் நகைச்சுவை கேரக்டரிலும், வில்லனாகவும் தன்னுடைய நடிப்பால் பலரை கவர்ந்திருந்தார். அவர் கடந்த ஜூன் 13ஆம் தேதி காலமானார்.

நடிகர் அடடே மனோகர்: சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகரான அடடே மனோகர் பிப்ரவரி 19ஆம் தேதி காலமானார். அவர் சின்ன மாப்பிள்ளை பெரிய மாப்பிள்ளை, கையளவு மனசு, நிம்மதி உங்கள் சாய்ஸ், ரமணி வெர்சஸ் ரமணி, ரயில் சினேகிதம் உட்பட பல சீரியல்களில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications