ரோபோ சங்கரை தொடர்ந்து விஜய் டிவி சீரியல் இயக்குனர் திடீர் மரணம்.. அதுவும் இவருக்கா இந்த நிலைமை? பரிதாபம்
சென்னை: தமிழ் சினிமா உலகம், கடந்த ஒரு வாரமாக பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில், இப்போது இயக்குநர் ஆர்.டி. நாராயணமூர்த்தியின் மறைவும் தமிழ் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாக வந்து சேர்ந்துள்ளது. கலைத்துறையில் தொடர்ந்து ஏற்பட்ட இந்த இழப்புகள், திரையுலகினரையும், ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

மனதை திருடிவிட்டாய்
ஆர்.டி. நாராயணமூர்த்திக்கு வயது 59. மாரடைப்பு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், நேற்று இரவு 8.30 மணியளவில் மரணமடைந்தார்.
நாராயணமூர்த்தியின் மறைவு
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மனதை திருடிவிட்டாய் திரைப்படத்தை நினைவுபடுத்தியுள்ளது. 2001 ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம், அதன் கதைக்களம், பாடல்கள் மற்றும் முக்கியமாக, விவேக் மற்றும் வடிவேலுவின் கிளாசிக் காமெடி காட்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த அந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அந்த படத்தின் பாடல்களும், காட்சிகளும் இன்றும் மீம்ஸ்களாகவும், ரீல்ஸ்களாகவும் உலா வருகின்றன.
மனதை திருடிவிட்டாய் படத்தைத் தொடர்ந்து, ஒரு பொண்ணு ஒரு பையன் என்ற படத்தையும் இயக்கியவர் நாராயணமூர்த்தி. வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் இவர் முத்திரை பதித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி உள்பட சில தொலைக்காட்சி தொடர்களையும் அவர் இயக்கி இருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகளே என் மருமகளே சிறிய வேலையும் அவர்தான் இயக்கிக் கொண்டிருந்தார். தனித்துவமான கதைக்களங்களைத் தேர்வு செய்து, ரசிகர்களுக்குப் படங்களை அளித்த நாராயணமூர்த்தியின் மறைவு, தமிழ்சினிமா உலகுக்கே பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
கடைசி நாட்கள்
ஒரு கலைஞனின் மரணம், அவன் சார்ந்த குடும்பத்திற்கு மட்டுமின்றி, அவன் கலையின் மூலம் மகிழ்ந்த அத்தனை ரசிகர்களுக்கும் ஒரு துயரமான செய்திதான். நாராயணமூர்த்தியின் மரணமும் அப்படித்தான். அவருக்கு அம்சவேணி என்கிற மனைவியும், லோகேஸ்வரன் என்கிற மகனும் உள்ளனர். அவருடைய மகன் லண்டனில் பணிபுரிந்து வருவதால், அவர் சென்னை திரும்பிய பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு தந்தையின் கடைசி சடங்குகளைக்கூட உடனடியாகச் செய்ய முடியாத சூழல், அந்தக் குடும்பத்தின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

நாராயணமூர்த்தியின் மறைவு, நம் வாழ்க்கையில் உள்ள நிச்சயமற்ற தன்மையை மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தியுள்ளது. நமக்கு மகிழ்ச்சியையும், பொழுதுபோக்கையும் அளித்த ஒரு கலைஞனின் வாழ்க்கை, இப்படி திடீரென முடிவுக்கு வருவது, அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. நாராயணமூர்த்தியின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
-
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
சிறகடிக்க ஆசை: போலி சாமியார் பற்றி உண்மையை நிரூபித்த முத்து! விஜயாக்கு தெரிய வந்த இன்னொரு உண்மை! செம சம்பவம் -
“அந்த பாவம் நிம்மதியா வாழ விடாது…” பெத்தவங்களை தவிக்க விடாதீங்க.. உருக்கமாக பேசிய சிவகுமார்! பின்னணி சம்பவம் -
கென் கருணாஸ்க்கு வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் செய்த சிம்பு.. யூத் பட நடிகை நெகிழ்ச்சி போஸ்ட் -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
Youth Box Office: டாப் ஹீரோக்களை மிரள வைத்த கென் கருணாஸ்.. யூத் படத்தின் ஐந்து நாள் வசூல் இத்தனை கோடியாம்! -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம்












Click it and Unblock the Notifications