This week OTT Releases: இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் பக்கா மாஸ்! டிமான்டி காலனி 2 முதல் கொட்டுக்காளி வரை!
சென்னை: திரையரங்குகளில் வெளியாகி ஒரு சில வாரங்களில் ஓடிடியில் பல படங்கள் வெளியிடப்படுகிறது. அதுவும் வார இறுதி கொண்டாடுவதற்காக வெள்ளிக்கிழமையில் அதிகமான படங்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் இந்த வாரம் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை எந்தெந்த படங்கள் வெளியாகிறது. என்பதை பார்க்கலாம்.
டிமான்டி காலனி 2 (Demonte Colony 2): அஜய் ஞானமுத்து இயக்கிய அமானுஷ்ய திகில் படமான டிமான்டி காலனி திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அதன் இரண்டாவது பாகம் கடந்த ஆகஸ்ட் 15, 2024 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு இப்போது செப்டம்பர் 27 2024இல் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது.

சாட்டர்டே: நடிகர் நாணியின் ஆக்சன் ட்ராமா திரைப்படமான சாட்டர்டே திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் ஆகஸ்ட் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் செப்டம்பர் 26 நெட்பிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

லவ் சிதாரா (Love Sitara): சோபிதா துலிபாலா நடித்த லவ் சிதாரா திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக போகிறது. இந்த திரைப்படம் வெள்ளிக்கிழமை அதாவது செப்டம்பர் 27 அன்று ஜி5 ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ராஜு சித்தார்த் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

கொட்டுகாளி (Kottukkali): நடிகர் சூரி நடிப்பில் வெளியான கொட்டுகாளி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரிய அளவில் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. பல பிரபலங்கள் இந்த திரைப்படங்களை பாராட்டிய நிலையில் இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது.

சரிபோதா சனிவாரம் (Saripodhaa Sanivaaram): நடிகர் நானியின் நடிப்பில் ஆக்சன் மற்றும் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்ட நானியின் 31 வது படமான சரிபோதா சனிவாரம் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் செப்டம்பர் 25ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.













Click it and Unblock the Notifications