Tamil selvi serial: ஏற்கனவே போராட்டம் இதில் ஜாதகம் வேற...!
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியல் சொல்ல வந்த கருத்தை முழுமையாக சொல்லாமல் ஸ்கிப் செய்து தாவிப் போவதாக இருக்கிறது. ஆரம்பத்தில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தது,
தமிழ்ச்செல்வி அத்தை பையனை கல்யாணம் செய்துகொள்வதில் பிரச்சனை ஏற்பட்டு, ஒரு விவசாயிக்கு தாழ்வு மனப்பான்மை கொண்டு வரும் அளவுக்கு கதை மாறிப்போயி, படித்த அமுதனுடன் தமிழ்ச்செல்விக்கு கல்யாணம் நடப்பது நமக்கே கஷ்டமாக இருக்கிறது.
இப்போது படிப்பில் போட்டி போட்ட இலக்கியா அமுதனின் தங்கையாக இருந்து தமிழ்ச்செல்வியை வீட்டை விட்டு விரட்ட கணக்கு போடும் சாதாரண குடும்ப கதையாக ஒளிபரப்பாகிட்டு வருது.

அமுதன் தமிழ்ச்செல்வி
அமுதன் தமிழ்ச்செல்வியை பார்த்த முதல் நாளே அவள் மீது காதல் கொள்கிறான். இவளைத் தேடி வரும்போதுதான் தமிழ்ச்செல்வி நான் அத்தை பையன் சரவணன் மாமாவைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லி உறுதியாக நின்றபோது, பார்க்க சந்தோஷமாக இருந்தது. சரவணன் படிக்காதவன் என்று அமுதன் சித்தி சரவணன் கிட்டே பேசறாங்க.இதையே அமுதனும் பேசறான்.

மாமாதான் வேணும்
எனக்கு சரவணன் மாமாதான் தாலி கட்டுவாரு.என் மாமாவுக்கு படிப்பு இல்லேன்னா என்ன,அவர் ஒரு பண்பு உள்ளவர். விவசாயி என்று புகழ்ந்து தள்ளிய தமிழ்ச்செல்விக்கு சரவணனுடன் கல்யாணம் நடக்க வேண்டுமென்று பார்த்தால், கடைசியில் தமிழ்ச்செல்விக்காக காத்திருந்த சரவணன், அவளை அமுதனுக்கு கல்யாணம் செய்து வைக்க பாடு பட்டுட்டு,தமிழ்ச்செல்விக்காக அவளின் எதிரி கொம்பனை கொன்று ஜெயிலில் இருக்கான்.

சரவணன் படிக்காதவன்
சரவணன் படிக்காதவன் என்றாலும் படித்த தமிழ்ச்செல்விக்காக கெத்தாக காத்து இருந்தபோது விவசாயி என்கிற கெத்து தெரிந்தது. அவனுக்கே படிப்பு பற்றி பேசி பேசி தாழ்வு மனப்பான்மை கொள்வது என்பது கொஞ்சம் வேதனையாக இருக்கிறது. கடைசியில் அமுதனுடன் கல்யாணம் நடந்துவிட்டது.

கல்யாணத்துக்கு எதிர்ப்பு
அமுதன் வீட்டில் இந்த கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க அமுதனின்பாட்டி மட்டும் ஆதரவாக இருக்கிறார்கள்.இந்த நிலையில்தான் அமுதன் ஜாதகத்தில் அவசர கல்யாணம் நடக்கும்., அந்த கல்யாணத்தில் புருஷன் பொண்டாட்டி ஒன்று சேர்ந்தால் அமுதனின் உயிருக்கே ஆபத்து என்று ஜோதிடர் சொல்கிறார். இதை மனசில் வச்சுக்கிட்டு அமுதனின் அம்மா புருஷன் பொண்டாட்டி ஒண்ணு சேர கூடாதுன்னு பார்த்துக்கறதில் மும்முரமா இருக்காங்க.
ஏற்கனவே தமிழ்ச்செல்வியை பிடிக்கலை.. இதில் ஜாதகத்தில் வேறு இப்படி இருக்கிறது என்று கதை போகுது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications