Tamil Selvi Serial: படிச்ச பொண்ணுக்கு படிக்காத விவசாயி மாப்பிள்ளையாக முடியாதா? கேள்வி வருதே...!
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியல் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல வியவசாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்த்தால் கதை வேறு திசையில் பயணிக்கிறது.
தமிழ்ச்செல்விக்கு சரவணன்தான் என்று சிறு வயது முதலே பேசி விடுகிறார்கள். ஆனால், தமிழ்ச்செல்வி நன்றாக படிக்கிறாள். படிப்பில் ஆர்வம் உள்ள தமிழ்ச்செல்வி கல்லூரி படிப்புக்கு பட்டணம் போகிறாள்.
அங்கும் படித்துவிட்டு வந்த நிலையில் கலெக்டருக்கு கல்யாணம் செய்துகிட்டு படிக்கலாம் என்று பாட்டி சொல்ல கல்யாண ஏற்பாடுகளும் நடக்கின்றன.

வெளியூர்ல் அமுதன்
வெளியூருக்கு தமிழ்ச்செல்வி படிக்க போயிருந்த போது ஓரிரு முறை அமுதனை பார்த்து இருக்கிறாள். ரவுடிகள் தமிழ்ச்செல்வியைத் துரத்த அமுதனிடம்தான் அடைக்கலம் கேட்கிறாள் தமிழ்செல்வி.இப்படியாக அமுதனின் மனதில் காதலியாக இடம் பிடித்துவிட்ட தமிழ்ச் செல்வியைத் தேடி கிராமத்துக்கே வந்துடறான் அமுதன்.

சரவணன் அமுதன்
சரவணன் படிக்காதவன்,அவனை கல்யாணம் செய்துகிட்டு மேட்ச் ஆகாதுன்னு அமுதன் தமிழ்ச்செல்விக்கிட்டே சொல்லியும், தமிழ்ச்செல்வி சரவணன் மாமாவைத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு சொல்றா. இதே எண்ணத்தில் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல், விவசாயம் பார்த்துக்கொண்டு இருந்த சரவணன் மனதில் அமுதன் சித்தி நஞ்சை விதைத்துடறாங்க.

கத்தி கொம்பன்
அவ்வப்போது தமிழ்ச்செல்வியை மிரட்டிக் கொண்டு இருந்த கொம்பன் சரவணனுடன் சண்டையிட, முதலில் கொம்பன் சரவணனை குத்த, சரவணன் கொம்பனைக் குத்தி கொம்பன் இறந்துடறான். அந்த நேரத்தில் கத்திக் குத்து பட்ட சரவணனை ஆஸ்பிடல் அழைச்சுட்டு போகாம, அந்த இடத்திலேயே அமுதனுக்கும், தமிழ்சல்விக்கும் கல்யாணம் நடக்கணும்னு சொல்றான்.இப்பவே நடத்தணும்னும் சொல்றான்.

எல்லாரும் குடும்பத்தில்
குடும்பத்தில் எல்லாரும் சேர்ந்து சரவணன் ஆசைப்பட்டதை செய்து வைக்கறாங்க இப்போது தமிழ்ச்செல்வி கழுத்தில் அமுதன் தாலி கட்டிய பிறகு ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடறாங்க. சரவணன் பிழைச்சுக்கறான்.
கடைசியில் ஒரு விவசாயிக்கு படிச்ச பொண்ணை கட்டிக்க தகுதி இல்லையா? இப்படி கேள்வி கேட்க வச்சுட்டீங்களே.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications