Tamil selvi serial: ஜோதிடத்தை முழுவதுமாக இப்படி நம்பலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருமகளிடம் மடிப்பிச்சை கேட்டால் அவள் என்ன செய்வாள் பாவம்.. அப்படித்தான் இருக்கிறது ஜோதிடத்தை நம்பி மாமியார் செய்யும் பொல்லாத காரியங்கள்.

சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலின் கதை எங்கோ ஆரம்பித்து இப்போது எதன் வழியாகவோ பயணித்து வருகிறது.

கதை இப்போது என் மகனை எனக்கு உயிரோடு குடு தமிழ்னு மாமியார் மருமகளிடம் மடிப் பிச்சை கேட்கும் அளவுக்கு கதை திசை மாறிப்போகுது.

விவசாயம் பெண் கல்வி

விவசாயம் பெண் கல்வி

தமிழ்ச்செல்வி சீரியல் ஆரம்பத்தில் சன் டிவியின் 6:30 மணி மாலை நேர ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வந்தது. பிறகு அதை மதியம் ஒரு மணிக்கு என்று மாற்றினார்கள். கதை ஆரம்பத்தில் பெண் கல்வியை வலியுறுத்துவதாக இருந்தது. அதோடு தமிழ்ச்செல்வி என்கிற அந்த பெண் விவசாய குடும்பத்தை சார்ந்தவளாகவும் இருந்தாள்.

தமிழ்ச்செல்வி அத்தை

தமிழ்ச்செல்வி அத்தை

தமிழ்ச்செல்வியை அத்தை பையன் விவசாயி முறைப் பையனுக்குத்தான் கட்டித் தருவதாக பேச்சு இருந்த நிலையில், அமுதன் திடீரென்று தமிழ்ச்செல்வியை கல்யாணம் செய்துக்கறான். அதற்கேற்ற மாதிரி அமுதனின் அம்மா ஜோதிடம் பார்க்க, உங்க பையனுக்கு திடீர்னு உங்களுக்கு தெரியாமலே கல்யாணம் நடக்கும்.

பிறக்கும் குழந்தையால்

பிறக்கும் குழந்தையால்

அப்படி கல்யாணம் நடந்தால் அவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தையால் உங்க பையன் உயிருக்கு ஆபத்து. அவர் உயிரோடு இருக்க மாட்டார்னு ஜோதிடர் சொல்றார். அப்போது ஆரம்பிக்குது மாமியார் கொடுமை படலம். ஐஏஎஸ் ஆகணும்னு கனவு கண்ட ஒரு பெண்ணின் போராட்டம் மாமியார் கொடுமை படலத்தில் ஆரம்பிக்குது.

விவசாயம் குடும்பம்

விவசாயம் குடும்பம்

ஜோதிடத்தை மட்டுமே நம்பி மருமகளை வாழ விடாமல் தடுக்கும் மாமியார், மருமகளுக்கு சூப்பில் மருந்து கொடுத்துடறாங்க.அதாவது குழந்தை பிறக்க கூடாதுன்னு. தமிழ்ச்செல்வி குடும்பத்துக்கு தெரிஞ்ச மருத்துவர் என்பதால், தமிழ்ச்செல்விக்கு இந்த விஷயம் தெரிஞ்சு போகுது. அப்புறமா மாமியார் உண்மையை சொல்லி,மருமகளிடம் மடிப்பிச்சை கேட்டு நிக்கறாங்க.

பெண்கல்வி, விவசாயம், குடும்பம் என்று எதையும் முழுவதுமாக காண்பிக்காமல் ஜோதிடத்தை நம்பி கதை போவதால், கலக்கமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+