Tamil Selvi Serial: குடும்பமே சேர்ந்து இப்படியா கும்மி அடிப்பாங்க? நம்பிக்கை போச்சே!
சென்னை: சன் டிவியின் தமிச்செல்வி சீரியலில் கத்திக்குத்து பட்ட ஒருத்தனை ஆஸ்பிடலுக்கு கொண்டு போகாமல் அவன் முன்னிலையில் கல்யாணம் நடத்த குடும்பமே சேர்ந்து கும்மி அடிக்கிறது.
சீரியல்களில் யதார்த்தத்தை பார்க்க முடியும் என்கிற நம்பிக்கை போயிருச்சுங்க.. அமுதனுக்கும், தமிழ்ச்செல்விக்கும் கல்யாணம் நடக்கணும் என்று சரவணன் சொல்ல, தலை கால் புரியாத குடும்பம் அதை கூடி செய்வது வேடிக்கையாக இருக்கிறது.,
இது மற்ற குடும்பங்களுக்கு முன் உதாரணமாக இருந்துவிடக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். படிப்பு என்பது இரு மனங்களுக்கு இடையில் இல்லாமல் இருந்த நிலையில் இப்படியா?

படிப்பு தமிழ்ச்செல்வி
தமிழ்ச்செல்விக்கு தான் படித்து கலக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால், வீட்டில் உள்ளவர்கள், அவளது அத்தை மகன் சரவணனுகுக்கு தமிழ்ச்செல்வியை பிளஸ் டூ முடிச்சவுடனே கல்யாணம் செய்து வைக்க துடிக்கறாங்க. பாட்டியின் உதவியோடு இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு, படிக்கப் போகிறாள் தமிழ்ச்செல்வி.

படிப்பை முடித்து
படிப்பை முடிச்சுட்டு, மேலே கலெக்டருக்கு படிக்கலாம் என்று நினைக்கும் போது, கல்யாணம் பண்ணிக்கிட்டு படின்னு வீட்டிலே சொல்றாங்க .தமிழ்ச்செல்விக்கும் மாமனை ரொம்ப பிடிக்கும் என்பதால், கல்யாணத்துக்கு சம்மதிச்சுடறா. இதற்கிடையில் பட்டணத்தில் அறிமுகம் ஆன அமுதன் தமிழ்ச்செல்வியை காதலிப்பதாக சொல்கிறான்.

தன்மானம் தலை தூக்க
அமுதனின் சித்தியும் மதனும் படிச்ச உனக்கு படிக்காத சரவணன் சரிவர மாட்டான். அதனால் காதலிக்கும் என்னையே நீங்க கல்யாணம் செய்துக்கணும்னு கேட்க, தமிழ்ச்செல்வி மாட்டேன் என்று சொல்லி விடுகிறாள். சித்தியும் தமிழ்ச்செல்வியின் மனசை அசைத்துப் பார்க்க, அப்போதும் மனம் மாறவில்லை தமிழ்ச்செல்வி. ஆனால், இதை எல்லாம் கேட்ட சரவணனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துருது.

படிக்காத சரவணன்
இந்த நேரத்தில்தான் கொம்பனாலும் தமிழ்ச்செல்விக்கு பிரச்சனை வந்து ,கொம்பன் சரவணனை கத்தியால் குத்த, இவன் பதிலுக்கு அவனை குத்திடறான். உடனே தமிழ்ச்செல்வி, அமுதன் கல்யாணம் நடந்தால்தான் நான் ஆஸ்பிடலுக்கு வருவேன்னு பேசறான்.குடும்பமே மண்டபத்துக்கு அழைச்சுட்டு போயி,அவன் முன்னால் அமுதனுக்கும் தமிழ்ச்செல்விக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறாங்க.
இந்த நேரத்தில் ; கல்யாணமா முக்கியம், கை காலை கட்டிப் போட்டு ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போறதை விட்டுட்டு, படிக்காத சரவணனை, விவசாயி சரவணனை அநியாயமா இப்படி ஏமாத்திட்டேங்களே...படிக்காதவனுக்கு படிச்ச பொண்ணை கல்யாணம் செய்து வைக்க கூடாதா?
ஒரு உயிரின் அருமை பெருமை தெரியாமல் குடும்பமே கூடி கும்மியடிச்சு அமுதனுக்கு,ம், தமிழ்ச்செல்விக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறாங்க...
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications