Tamil selvi serial: தமிழ்ச்செல்வி கல்யாணத்தை எப்பதான் முடிப்பீங்க?
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலில் நான்கு வருட படிப்பை கூட ஒரு சில எபிசோட்களில் முடித்து விட்டார்கள். ஆனால், அவளின் கல்யாணம் எபிஸோட்ஸ் முடிந்த பாடில்லை.
சரவணன் மாமா தமிழ்சசெல்விக்காக காத்திருக்க, அமுதன் தமிழ்ச்செல்வியை காதலிக்கிறான். போதா குறைக்கு தமிழ்ச்செல்வியை அமுதனுக்கு கட்டி வைக்க வேண்டும் என்று அவனின் சித்தி துடிக்கறாங்க.
இந்த சமயத்தில்தான் சித்தி மாப்பிள்ளையை கடத்த திட்டம் போட, கடத்த வந்தவங்க அமுதனை மாப்பிள்ளைன்னு நினைச்சு கடத்திட சித்தி கடுப்பாகி அமுதனை உடனே அனுப்பி வைங்கடான்னு கத்தறாங்க.

கொம்பன் தமிழ்ச்செல்வி
கொம்பன் என்று ஒரு ரவுடி பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாரை கொன்னுடறான் .அவனை தமிழ்ச்செல்வி பாடம் சொல்லிக் குடுக்கற வாத்தியார் கடவுளுக்கு சமம் அவரை போயி கொன்னு இருக்கியேன்னு கன்னத்தில் அடிச்சுடறா. அன்னிலேர்ந்து நாலு வருஷமா கொம்பன் ஜெயிலிலிருந்து தப்பிச்சு, தமிழ்ச்செல்வியை குறி வைத்து தேடுகிறான்.

மல்லிகா தங்கை
தங்கை மல்லிகாவை கொம்பன் கடத்தி வச்சுக்கிட்டு, தமிழ்ச்செல்வியை வரவழைச்சு அவளின் படிப்பு இடையூறு செய்கிறான். இப்போது கல்யாணத்தை எப்படியும் தடுத்து நிறுத்தி,. அவளின் கழுத்தில் தான் தாலி கட்டப்போவதாக கூறி பயமுறுத்தி இருக்கான். கொம்பன் என்ன செய்வானோ,ஏது செய்வானோ என்று கல்யாணத்தில் இதுவும் ஒரு பயமாக இருக்கிறது.

சித்தி சரவணனை
அமுதனின் சித்தி சரவணனை கடத்திட்டா,அந்த இடத்தில் தான் பிள்ளையாக வளர்த்த அமுதனை மாப்பிள்ளையாக்கி அவன் ஆசைப்பட்ட தமிழ்ச்செல்வியை கல்யாணம் செய்து வைக்க நினைச்சு, கடத்தவும் ஏற்பாடு செய்யறாங்க..கடத்த வந்த ஆட்கள் சரவணனுக்கு பதில் அமுதனையே மாத்தி கடத்திடறாங்க. இதனால் பாட்டிக்கு என்ன நேர்ந்தது என்று அமுதனால் மற்றவர்களிடம் சொல்ல முடியாமல் போகிறது.

பாட்டி தமிழ்ச்செல்வி
தமிழ்ச்செல்வியின் பாட்டிக்கு மயக்கம் வந்துருது. தான் மயங்கி விழுந்து எதாவது ஆகிவிட்டால் தமிழ்ச் செல்விக்கும், சரவணனுக்கும் கல்யாணம் நடக்காமல் போயிருமோ என்று பயந்த பாட்டி, அமுதனை அழைத்து தன்னை ஒரு ரூமில் படுக்க வைக்க சொல்றாங்க. அவன் தனது சித்தப்பா டாக்டரை கூப்பிடறேன்னு சொல்றதுக்குள்ளே அவனை ஆளுங்க கடத்திட இப்போது பாட்டி மயங்கி ரூமில் கிடக்கறாங்க. பாட்டியை தமிழ்ச்செல்வி உட்பட எல்லாரும் தேடிக்கொண்டு இருக்க, அமுதன் தப்பிச்சு ஓடி வர்றான்.
தமிழ்ச்செல்வி கல்யாணம் யாருடன் எப்போது நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications