Tamil Selvi Serial: தமிழ்ச்செல்வி மனசில் ஜொலிப்பவன் விவசாயிதானே?
சென்னை: சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியல் பல உண்மைகளை புரிய வைப்பதாகவும், உணர்த்துவதாகவும் இருக்கிறது. இப்படியே இந்த கதை தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.
தமிழ்ச்செல்வி சொன்னபடி பட்டணத்தில் போயி இன்ஜினியரிங் முடிச்சு கோல்ட் மெடல் வாங்கிட்டு வந்தாச்சு.இப்போது கலெக்டருக்கு படிக்க வேண்டியதுதான் பாக்கி.
இந்த நிலையில் முன்பு நிச்சயிக்கப்பட்டது போல அத்தை மகன் சரவணனுடன் தமிழ்ச்செல்விக்கு கல்யாணம் நடக்க இருக்கிறது. இதற்கிடையில் அமுதன் தமிழ்ச்செல்வியுடன் தனது கல்யாணம் நடக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறான்.

படிக்காத சரவணன்
படிக்காதவன் என்று காரணம் காண்பித்து சரவணனை ஓரம் கட்டிவிட்டு, தான் தமிழ்ச் செல்வியை கல்யாணம் செய்துக்கலாம் என்கிற எண்ணத்தில் அமுதன் பல விஷயங்களை செய்து வருகிறான்.இவனுக்கு பக்க பலமாக அமுதனின் சித்தி இருந்து வர்றாங்க. சித்தி எதுக்கு இப்படி செய்யணும்னு பார்த்தால் பிள்ளை இல்லாதவங்க சித்தியும், அவங்க புருஷன் டாக்டரும் அமுதனை வளர்த்தவங்க. சித்தி தன்னைவிட்டு அமுதன் போயிட கூடாதுன்னு இந்த வேலையை செய்யறாங்க.

அமுதன் தமிழ்ச்செல்வி
சித்தி அமுதனை ஆள் வச்சு அடிச்சுட்டு, சரவணன் ஆள் வச்சு அடிச்சது போல செட்டப் செய்ய, சரவணன் மீது தமிழ்ச்செல்வி கோபத்துடன் இருக்கிறாள். சரவணன் மாமாவை இனிமேல் முகத்தில் விழிக்காதீங்கன்னு திட்டி விடுகிறாள். சரவணன் மன கஷ்டத்தில் இருக்கும்போது நமக்கே கூட தமிழ்ச்செல்வி மனசு மாறிடுவாளோன்னு எண்ணம் வந்துருது.

தோழி நமீதா
தமிழ்ச்செல்வியின் தோழி நமீதா கல்யாணத்துக்காக வருபவள்,அமுதனுக்கும் உதவி செய்ய நினைக்கிறாள். தமிழ்ச்செல்விக்கு கல்யாணம் நெருங்கியாச்சு..இன்னமும் அவள் உங்களுக்கு கிடைப்பாள்னு பேசிகிட்டு இருக்கீங்க அமுதன்.இது சினிமாத்தனமா இல்லையான்னு கேட்கறா. இன்னிக்கு தமிழ்ச்செல்வி மனசுல யார் இருக்காங்கன்னு கேட்டு தெரிஞ்சுக்கோன்னு சொல்லித் தர்றா.

துண்டு ரெண்டு
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசிட, தமிழ்ச்செல்வி கிட்டே பேச வெயிட் பண்ணிக்கொண்டு இருக்கான் அமுதன்.அப்போது நமீதா அமுதன் உன் கூட பேசணுமாம்.. போயி என்னன்னு கேட்டுட்டு வான்னு சொல்றா. அமுதனும் ஆரம்பத்தில் சொன்னது போல, படிக்காத சரவணன் கூட எப்படி வாழப் போறீங்கன்னு கேட்கறான். அவனுக்கு ஏபிசிடி தெரியுமான்னு கேட்க,

ஏபிசிடி தெரியுமா
அதுதான் ஒரு கல்யாணத்துக்கு குவாலிஃபிகேஷன்னு நீங்க நினைச்சால் உங்களை நினைச்சு எனக்கு பரிதாபமா இருக்கு. வாழ்க்கைக்கு படிப்பும் முக்கியம்தான்.. ஆனால், பண்பு ரொம்ப ரொம்ப முக்கியம். இதுவரைக்கும் என் மாமா உங்களை காயப்படுத்தி பேசினதே இல்லை. நீங்க அவரை படிக்காதவர்னு இத்தனை தடவை குத்தி காட்டி பேசறீங்க. கல்யாணம் முடிவான நிலையிலும் இதை பத்தி பேச உங்களுக்கு வெட்கமா இல்லையா கெட் லாஸ்ட்னு சொல்லிடறா.
சபாஷ் சொல்லலாம்னுதான் தோணுது!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications