டாப் 10 தமிழ் சீரியல்கள்: சன் டிவி டாப் சீரியலை பின்னுக்கு தள்ளிய சிறகடிக்க ஆசை.. எதிர்பாராத மாற்றம்
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 8வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் சரிவடைந்திருக்கிறது.
இதற்கு சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனாலும் கடந்த வாரத்தோடு ஒப்பிடும்போது சுந்தரி, ஆனந்த ராகம் சீரியல் போன்ற சில சீரியல்கள் டிஆர்பியில் அதிகமாக அடி வாங்கி இருக்கிறது.
அதுபோல எதிர்பார்க்காத பல சீரியல்கள் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கிறது. அதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.

1, சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 11.06 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.
2, கயல் சீரியல் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 10.14 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் 10.01 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
4, வானத்தைப்போல சீரியல் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 8.76 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்திருக்கிறது.
5, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் 4வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 8.35 புள்ளிகளை பெற்று இந்த முறை 5-வது இடத்தில் இருக்கிறது.

6, சிறகடிக்க ஆசை சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 8.32 புள்ளிகளை பெற்று 6-வது இடத்தை பிடித்திருக்கிறது.
7, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் 5வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 8.22 புள்ளிகளை பெற்று 6வது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

8, பாக்கியலட்சுமி சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த முறை 7.27 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தை பிடித்திருக்கிறது.
9,பாண்டியன் ஸ்டோர் 2: சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த முறை 6.36 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தை பிடித்திருக்கிறது.
10,ஆஹா கல்யாணம் சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் கல்யாணம் சீரியல் இந்த முறை 5.84 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தை பிடித்திருக்கிறது.
-
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சியாக நடித்த நடிகை மரணம்.. இப்படியா நடக்கணும்? கலங்கி நிற்கும் குடும்பம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications