Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Top 10 Serial: விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ்.. கெத்து காட்டிய சிறகடிக்க ஆசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 12-வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் சரிவடைந்திருக்கிறது.

அதனால் டிஆர்பி தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.

Top 10 Serials 10

1, சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த முறை 9.93 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2, கயல் சீரியல் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரம் 9.72 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்திருக்கிறது.

3, மூன்று முடிச்சு சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரத்தில் 9.46 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்திருக்கிறது.

4, மருமகள் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் 8.28 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்திருக்கிறது.

Top 10 Serials 10

5, சிறகடிக்க ஆசை சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 8.18 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தை பிடித்திருக்கிறது.

6, எதிர்நீச்சல் தொடர்கிறது: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் கடந்த வாரத்தில் இந்த சீரியல் 7.50 புள்ளிகளை பெற்று 6வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

7, அன்னம் சீரியல்: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் 7.13 புள்ளிகளைப் பெற்று 7-வது இடத்தை பிடித்திருக்கிறது.

Top 10 Serials 10

8, பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்தில் 7.00 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தை பிடித்திருக்கிறது.

9, அய்யனார் துணை சீரியல்: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலைகள் இந்த சீரியல் கடந்த வாரத்தில் 6.54 புள்ளிகளை பெற்று ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது.

10, கார்த்திகை தீபம் சீரியல்: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் பல வாரங்களுக்கு பிறகு 6.41 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+