டாப் 10 தமிழ் சீரியல்கள்: எதிர்நீச்சல் சீரியலின் எதிர்பாராத இடம்.. முன்னேறிய விஜய் டிவி சீரியல்
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 13வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் சரிவடைந்திருக்கிறது.
பல மாதங்களுக்குப் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் முதல் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறது. அதுபோல சிறகடிக்க ஆசை சீரியலும் முன்னேறி இருக்கிறது.
அதனால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.
1, சிங்க பெண்ணே சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 10.15 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.

2, கயல் சீரியல் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 9.68 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

3, எதிர்நீச்சல் சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் 8.74 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

4, வானத்தைப்போல சீரியல் : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் 8.09 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தை பிடித்திருக்கிறது.

5, சிறகடிக்க ஆசை சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த முறை 7.91 புள்ளிகளை பெற்று 5-வது இடத்தை பிடித்திருக்கிறது.

6, இனியா சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியல் கடந்த வாரத்தில் 5வது இடத்தில் இருந்த நிலையில் இந்த முறை 7.80புள்ளிகளை பெற்று இந்த முறை 6 -வது இடத்தில் இருக்கிறது.

7, சுந்தரி சீரியல்: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் கடந்த வாரத்தில் 5வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.72 புள்ளிகளை பெற்று 6வது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

8, பாக்கியலட்சுமி சீரியல் :விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இந்த முறை 6.91 புள்ளிகளை பெற்று 8-வது இடத்தை பிடித்திருக்கிறது.

9,பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த முறை 5.86 புள்ளிகளை பெற்று 9-வது இடத்தை பிடித்திருக்கிறது.

10, கார்த்திகை தீபம் சீரியல்: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் பல மாதங்களுக்குப் பிறகு, கடந்த வாரத்தில் 5.66 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications