Top 10 Serial: இந்த வார டிஆர்பி. முதல் இடத்தை இழந்த சிங்க பெண்ணே.. டாப்புக்கு வந்த அய்யனார் துணை
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 24-வது வாரத்திற்கான டாப் 10 இடங்களை பிடித்த சீரியல் விவரங்கள் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரத்தை ஒப்பிடும் போது இந்த வாரத்தில் பல சீரியல்கள் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு டிஆர்பியில் சரிவடைந்திருக்கிறது.
அதனால் டிஆர்பி தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவல்கள் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. அதை கீழே வரிசையாக பார்க்கலாம்.

1, மூன்று முடிச்சு மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் தான் இதுவரைக்கும் முதலிடத்தில் இருந்த நிலையில் இந்த வாரத்தில் அந்த சீரியலை பின்னுக்கு தள்ளி மூன்று முடிச்சு மற்றும் மருமகள் சீரியலின் மகா சங்கமம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 9.80 புள்ளிகளை பெற்று டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கிறது.
2, சிங்க பெண்ணே சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த முறை 9.63 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.
3, கயல் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரத்தில் 9.27 புள்ளிகளைப் பெற்று மீண்டும் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
4, சிறகடிக்க ஆசை சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த வாரத்தைப்போலவே இந்த வாரமும் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரத்தில் 7. 87 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
5, அய்யனார் துணை சீரியல்
விஜய் டிவியில் 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் 7.62 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தை பிடித்திருக்கிறது.
6, எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் எட்டாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 7.50 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.
7, அன்னம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் 7.49 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது.
8, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த வாரத்தில் ஒன்பதாவது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரத்தில் 6.87 புள்ளிகளைப் பிடித்து எட்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது.
9, சின்ன மருமகள் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் பல வாரங்களுக்கு பிறகு இந்த வாரம் டாப் 10 இடத்திற்கு வந்திருக்கிறது அதிலும் இந்த வாரத்தில் 6.72 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறது.
10, ராமாயணம் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் சீரியல் பல வாரங்களுக்கு பிறகு பத்தாவது இடத்திற்குள் வந்திருக்கிறது. இந்த வாரத்தில் இந்த சீரியல் 6.01 புள்ளிகளை பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications